தலைவர் : கா. ந. அண்ணாதுரை
கா. ந. அண்ணாதுரை
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை
*ஓர் இந்திய அரசியியல்வாதியும் , தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சர் ஆவர் .
பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.
*இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரஸிலாத முதலாவது திராவிட கட்சி தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
| பிறப்பு | அண்ணாதுரை செப்டம்பர் 15, 1909 காஞ்சிபுரம் , தமிழ்நாடு , பிரித்தானிய இந்தியா |
|---|
| இறப்பு | பெப்ரவரி 3, 1969 (அகவை 59) சென்னை , தமிழ்நாடு இந்தியா |
|---|---|
| குடியுரிமை | இந்தியா |
| அரசியல் கட்சி | நீதிக்கட்சி , திராவிட முன்னேற்றக்கழகம் |
| வாழ்க்கை துணைவர்(கள்) | ராணி அண்ணாதுரை |
| பிள்ளைகள் | யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் |
|---|---|
| பெற்றோர் | தந்தை : நடராஜன் முதலியார் தாயாா் : பங்காரு அம்மாள் |
| பணி | அறையல்வாதி |
| சமயம் | ஓரி கடவுட் கொள்கை |
கல்வி
*1934- இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை *சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
இதழியல்பணி
அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார்.
1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார்.
பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார்.
1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார்.
Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
No comments:
Post a Comment