பொருளாதாரம் :ஐந்தாண்டு திட்டம்

 


முதல் ஐந்தாண்டு திட்டம் (1951-1956):

·         இது ஹார்ரோடு - டோமெர் வடிவத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. 

  • சமுதாய வளர்ச்சி திட்டம் 1952-ல் உருவாக்கப்பட்டது.
  • முதல் ஐந்தாண்டு திட்டம் இரு அடுக்குகளை உடைய குறிக்கோள்களை கொண்டது.
    • சமமற்ற பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சிக்கல்கள் - அகதிகள் வருகை, அதிகமான உணவு தட்டுப்பாடு மற்றும் உயரும் பணவீக்கத்தை சரி செய்தல்.
    • அனைத்து தரப்பு மக்களும் சமமான முன்னேற்றம் பெற ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டின் வருமானம் மற்றும் நிலையான மக்களின் வாழ்வியல் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல்.

·         வேளாண்மை, நீர் பாசனம், விலை நிலைப்புத்தன்மை, மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

·         இது இலக்கைவிட மேலாக இருந்தது. ஏனெனில் கடைசி இரண்டு வருடங்களில் சிறப்பான அறுவடை இருந்தது.

·         இலக்கு 2.9 % முடிவில் அடைந்தது 3.6%.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (1956-1961):

·         இது மஹலனோபிஸ் திட்டம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. (மஹலனோபிஸ் => இந்திய புள்ளியியலின் தந்தை ஆவார்.)

·         இத்திட்டம் 1928 சோவியத்தின் "பெல்ட்மேன்" என்னும் திட்டத்தை அடிப்படையாக கொண்டது.

·         இந்த ஐந்தாண்டு திட்டம் பொருளாதார நிலைப்பு தன்மையை முக்கியமாக கவனித்து. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் வைக்கப்பட்ட குறிக்கோள்கள் (வேளாண்மை) நிறைவேற்றப்பட்டது. எனவே, இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு குறைவான முக்கியத்துவம் தரப்பட்டது.

  • இதன் குறிக்கோள் வேகமான தொழில்மயமாக்கல், குறிப்பாக கனரக தொழிற்சாலைகள். (இரும்பு, ஸ்டீல் மற்றும் உர தொழிற்சாலைகள்).
  • இதனை தவிர தொழிற்கொள்கை 1956-ல் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அமைப்புகள் ஆகியவற்றிற்கு பொருளாதார கொள்கை குறிக்கோளை அடைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
  • இது அதிக இறக்குமதியினால் ஏற்படும் பணத்தட்டுப்பாடு அதனால் வெளிநாடுகளில் கடன் பெரும் நிலை ஆகியவற்றை கண்டித்தது
  • இந்த திட்டம் அடிப்படை முக்கியத்துவத்தை வேளாண்மையிலிருந்து தொழில்துறைக்கு மாற்றியது
  • ரூர்கேலா, பிலாய், துர்காபூர் இரும்பு ஆலைகள் நிறுவப்பட்டன.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961-1966):

·         இந்த ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய பொருளாதாரம் உயர்வான நிலையை அடைந்தது.

·         இது ஒரு குறிப்பிட்ட மாதிரியை மட்டுமே அடிப்படையாக கொண்டு அமையவில்லை.

·         பேராசிரியர்.S.சக்ரவர்த்தி மற்றும் சாதிக் ஆகியோர்களின் திட்டங்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. (“The mathematical Frame work of Third Model.” என்பது பேராசிரியர் S.சக்ரவர்த்தியின் புகழ்பெற்ற கட்டுரை ஆகும்.)

·         இது காட்கில் திட்டம் (D.R.காட்கில் என்பவரது மாதிரியையும் அடிப்படையாக கொண்டதுஎன்று அழைக்கப்படுகிறது.

·         இத்திட்டம், இந்தியாவை "தற்சார்பு பொருளாதாரமாக" மற்றும் குறிக்கோளை அடிப்படையாக கொண்டது.

·         இது முதல் இரு திட்டங்களில் இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், அதன்பிறகு ஏற்றுமதி மற்றும் தொழில்வளத்திற்கு வாய்ப்பளிக்கவும் செய்தது.

·         இதன் மற்ற குறிக்கோள் - அடிப்படை தொழிற்ச்சாலைகளை விரிவாக்கம் செய்தல், நாட்டின் தொழிலாளர் பலத்தை உயர்வாக பயன்படுத்துதல், வருமானம் மற்றும் வளங்களின் சமமின்மை குறைதல் ஆகியவற்றை கொண்டது.

·         பொக்காரோ இரும்பு ஆலை தொடங்கப்பட்டது.

·         இக்காலகட்டத்தில் அதிகப்படியான வெளிநாட்டு உதவி கிடைத்தது.(IMF)

·         எனினும், இந்த ஐந்தாண்டு திட்டம் - சீன படையெடுப்பு (1962), இந்தியா-பாக்கிஸ்தான் போர் (1965) மற்றும் கடுமையான பஞ்சம் (1965-1966) காரணமாக தோல்வியில் முடிந்தது.

மூன்றாண்டு திட்டம் (1966-1969):

·         லியாண்டிப் வளர்ச்சி மாதிரி அடிப்படையாக கொண்டது.

·         ஐந்தாண்டு திட்டங்களுக்கு மூன்று வருடம் ஓய்வளிக்கப்பட்டது. (திட்ட விடுமுறை காலம்).

·         இத்திட்டத்தின்போது வேளாண்மை பொருள்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.(பசுமை புரட்சி)

·         இத்திட்டத்தின்போது முழுவதுமாக புதிய வேளாண்மை திட்டங்கள் (அதிக விளைச்சல் தரும் விதைகள், உயர்தர உரங்கள், நீர்ப்பாசன பெருக்கம் மற்றும் மண் பாதுகாப்பு) நடைமுறைப்படுத்தப்பட்டு வேளாண்மை தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

·         ஐந்தாண்டு திட்டங்களின்போது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் பெற்ற பொருளாதார சரிவை கவனித்து, அதனை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

நான்காம் ஐந்தாண்டு திட்டம் (1969-1974):

·         இத்திட்டம் ஆலன் மனே மற்றும் அசோக் ருத்ரா மாதிரியை அடிப்படையாக கொண்டது.       (Open Consistency Model).

·         இது இரண்டு குறிக்கோள்களை கொண்டது. "நிலையான வளர்ச்சி" மற்றும் "தன்னிறைவு நோக்கிய வளர்ச்சி".

·         குடும்ப கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

·         முதல் இரண்டு ஆண்டுகளில் சாதனை உற்பத்தியாக அமைந்தது. இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பருவ மழை பொய்த்ததால் இத்திட்டம் தோல்வி அடைந்தது.

·         1971 இந்தியா - பாக்கிஸ்தான் போருக்குப்பின் பங்களாதேச அகதிகள் வருகையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

·         இத்திட்டக்காலத்தில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியாவின் முதலாவது அணு ஆயுத சோதனை நடத்தப்பெற்றது.

  • முதல்முறையாக வங்கிகள் இத்திட்டக்காலத்தில் தேசியமயமாக்கப்பட்டது.

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் (1974-1979):

  • இத்திட்டம் D.D.தார் அவர்கள் கூறிய இரு குறிக்கோள்கள் "வறுமை ஒழிப்பு" (Garibi Hatao) மற்றும் தன்னிறைவு அடைதல்" ஆகியவற்றை முக்கியமாக கொண்டு அவரால் உருவாக்கப்பட்டது.

·         இக்காலத்தில் இந்திரா காந்தி தனது 20 அம்ச திட்டத்தை வெளியிட்டார்.

·         அதிக விலை உயர்வின் வழியாக அதிக வருமானம் பெறுதல் மற்றும் மிக அதிகமான உள்நாட்டு சேமிப்பு பெருக்குதல் ஆகியவற்றின் மூலம் மேலே கூறப்பட்டுள்ள இரு கொள்கையை அடைதல்.

·         தேசிய குறைந்தபட்ச தேவைகளான ஆரம்பக்கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, உணவு, வீடற்ற வேலையாட்களுக்கு வீடு, நிலம், கிராமப்புற சாலைகள், கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு வருதல் மற்றும் துணை நகர தூய்மையின்மையை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.

·         IRDP, TRYSEM போன்ற ஐந்தாண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டது.

·         குறைந்தபட்ச தேவை திட்டம் தொடங்கப்பட்டது.

·         ஓர் ஆண்டிற்கு முன்னேரே முடிக்கப்பெற்ற ஐந்தாண்டு திட்டமாகும்.

·         இத்திட்டம் 1978-ல் நீக்கப்பட்டது. (ஏனெனில் புதிதாக பொறுப்பேற்ற ஜனதா அரசு 1978-ல் சுழல் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

சுழற்சி திட்டம் (1978-1980):

·         "குர்னல் மிர்டால்" மாதிரியை அல்லது ஜப்பான் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.

·         ஜனதா அரசின் திட்டம் "சுழற்சி திட்டம்" எனப்படுகிறது.

·         இத்திட்டம் இரு வருடம் மட்டுமே நிலைத்தது. பிறகு பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை நீக்கியது.

·         இது விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், குடிசைத்தொழில் மற்றும் சிறு தொழிற்ச்சாலையை பெருக்கவும் இதன் மூலம் நுகர்பொருளை பெருக்கவும், குறைந்த வருமானம் பெரும் வகுப்பினரை குறைந்தபட்ச தேவையை அடைய வைக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980-1985):

·         இது ஜனதா அரசு கொண்டுவந்த திட்டத்தின் தொடர்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.

·         இத்திட்டம் இருமுறை போடப்பட்ட ஐந்தாண்டு திட்டம் (ஜனதா மற்றும் காங்கிரஸ்) என்று அழைக்கப்படுகிறது.

·         இது பல வளர்ச்சி மந்திரிகளின் (திட்டங்களின்) தொகுப்பு ஆகும்.

·         வறுமை ஒழிப்பை முதன்மையாக கொண்டது.

·         வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைதல்.

·         விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு என தனி வங்கிகள் தொடங்கப்பட்டது 

·         சுற்றுலாவை  மற்றும்  தகவல்  தொழில்   துறையை மேம்படுத்துவது.

  • பிற குறிக்கோள்கள்: நாட்டின் வருமானத்தை பெருக்குதல், தொழில்நுட்பங்களை  நவீனமயமாக்குதல், வேலையின்மையை தொடர்ச்சியாக குறைப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் குடும்ப கட்டுப்பாடு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல்.

ஏழாவது ஐந்தாண்டு திட்டம் (1985-1990):

·         15 ஆண்டுகால வளர்ச்சி திட்ட மந்திரிகளின் தொகுப்பு ஆகும்.

·         சமூக நீதி மற்றும் தற்சார்பு அடைதல், உணவு தானிய உற்பத்தியில் துரித வளர்ச்சியை கொண்டுவர தேவையான கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

·         தொழிற்ச்சாலைகளின் தரத்தை உயர்த்துதல்.

·         திட்டமிடுதலின் அடிப்படை அமைப்பு மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

·         இந்த திட்டம் முகுந்த வெற்றியை பெற்றது. பொருளாதார வளர்ச்சி திட்டமிடப்பட்ட 5%- விட 6% ஆக இருந்தது.

ஆண்டு திட்டங்கள் (1990-1992):

·         1991-ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் அப்போதைய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்களால் "இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கை ஜூலை 24 அன்று வெளியிடப்பட்டது."

  • இக்கொள்கை LPG- (Liberalisation, privatisation, Globalisation) முதன்மையாக கொண்டது.
  • இதனால் இந்திய பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சியினை அடைந்தது.

எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-1997):

·         இது இரண்டு ஆண்டுகள் தள்ளிவைக்கப்பட்டது.

·         ஜான் W.மில்லர் என்பவரது மாதிரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

·         இத்திட்டம் ஏப்ரல் 1, 1992-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது.

·         இது தனி மனிதனின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டது

·         ஆற்றலை பெருக்குவதற்கும் மற்றும் தொழிற்ச்சாலைகளை மேலும், நவீனமயமாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

·         இத்திடம் மிகவும் மோசமாக இருந்த பொருளாதார நிலையை வருடாந்திரவர்ச்சி வீதமான 5.6%-கு கொண்டுவர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

·         சில முக்கியமான பொருளாதார சாதனைகள் - பொருளாதார வளர்ச்சி, விவசாய வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புடைய தொழில் வளர்ச்சி, உற்பத்தித்துறை வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி ஆகியவை ஆகும்.

·         இந்திய உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராக 1995 ஜனவரி 1 அன்று ஆனது.

·         எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சம் GDP (மொத்த உள்நாடு உற்பத்தி) சராசரியாக 6.8% ஆக உயர்ந்தது.

·         (இது 5.6% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.)

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் (1997-2002):

·         இந்திய சுதந்திரம் அடைந்து 50 ஆண்டில் (பொன் ஆண்டு) தொடங்கப்பட்டது.

·         "Social Justice with equal" - அனைவருக்கும் சமமான சமூக நீதி என்பதை அடிப்படையாக கொண்டது.

·         SAPs - Special Action Plans - இலக்குகளை அடைவதற்க்காக சிறப்பு செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

·         இது நன்கு முக்கிய துறைகளில் மேம்பாடு அடைய செய்தது - வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பிரதேச சமநிலை (நாடு தழுவிய சமநிலை) மற்றும் தன்னிறைவு ஆகும்.

·         இத்திட்ட காலத்தில் ஒடிசா புயல், குஜராத் பூகம்பம், கார்கில் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.

பத்தாவது ஐந்தாண்டு திட்டம் (2002-2007):

·         உலகளவில் இந்தியாவை வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம் கொண்ட நாடக மாற்றுதல்.

·         அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்.

·         நாடுதழுவிய சமத்துவம் மற்றும் சமூகநீதி பிரச்னையை தீர்த்தல்.

·         வேலைக்கு உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

·         உள்நாட்டு உற்பத்தியின் இலக்கு : 8%

·         வறுமையை 2007ம் ஆண்டிற்குள் 20%-மும், 2012ம் ஆண்டிற்குள் 10%-மும் குறைதல்.

·         கல்வி மற்றும் ஊதியத்தில் பாலின சமத்துவமின்மையை 2007ம் ஆண்டிற்குள் 50% குறைதல்.

·         ஆரம்பக் கல்வி எழுத்தறிவு வளர்ச்சியை 2007-ம் ஆண்டிற்குள் 72% ஆகவும், 2012ம் ஆண்டிற்குள் 80% ஆகவும் உயர்த்துதல்.

11-வது ஐந்தாண்டு திட்டம் (2007-2012):

·         C.ரங்கராஜன் மாதிரியை அடிப்படையாக கொண்டு செயல் படுத்தப்பட்டது.

·         Inclusive Growth in All Sector - அனைத்து துறைகளிலும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைதல்.

·         வளர்ச்சி விகிதத்தை 8% லிருந்து 10-ஆக நிலைநிறுத்தி தனிநபர் வருமானத்தை இருமடங்கு ஆக்குதல் (2016-2017).

·         வேளாண்மை GDP வளர்ச்சி விகிதத்தை வருடத்திற்கு 4 % ஆக உயர்த்துவதுடன் அதன் பயனை பரவலாக செய்தல்.

·         மாணவர்கள் ஆரம்ப பள்ளிகளில் இருந்து வெளியேறும் சதவீதத்தை 2011-2012 ஆண்டிற்குள் 20% ஆக குறைதல் (2003-2004ல் - 52.2%).

·         ஏழு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் கல்வியறிவு சதவீதத்தை 85% ஆக உயர்த்துதல்.

·         (IMR) குழந்தை பிரசவத்தின் பொது இறப்பதை 28 ஆகவும், தாய் இறப்பை 1 ஆகவும் (1000 பிரசவத்திற்கு) குறைதல்.

12-வது ஐந்தாண்டு திட்டம் (2012-2017):

·         More Inclusive Sustainable Growth - எல்லா துறைகளிலும் அதிக நீடித்த வளர்ச்சி.

·         அக்டோபர் 2011 தேசிய மேம்பாட்டு குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

·         மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% என இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

·         பிற முக்கிய அம்சங்கள்:

ஐந்தாண்டு திட்டங்கள் வளர்ச்சி மற்றும் இலக்குகள்:

1-திட்டம் > இலக்கு-2.9%, வளர்ச்சி-3.6%

2-திட்டம் > இலக்கு-4.5%, வளர்ச்சி-4.1%

3-திட்டம் > இலக்கு-5.6%, வளர்ச்சி-2.8%

4-திட்டம் > இலக்கு-5.7%, வளர்ச்சி-3.3%

5-திட்டம் > இலக்கு-4.4%, வளர்ச்சி-4.8%

6-திட்டம் > இலக்கு-5.2%, வளர்ச்சி-5.7%

7-திட்டம் > இலக்கு-5%, வளர்ச்சி-6%

8-திட்டம் > இலக்கு-5.6%, வளர்ச்சி-6.8%

9-திட்டம் > இலக்கு-7%, வளர்ச்சி-5.6%

10-திட்டம் > இலக்கு-8%, வளர்ச்சி-7.2%

11-திட்டம் > இலக்கு-8.1%, வளர்ச்சி-7.9%

12-திட்டம் > இலக்கு-9%, வளர்ச்சி- *

 

No comments:

Post a Comment