வரலாறு :சிந்துவெளி நாகரிகம்

 

சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா

  • ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.
  • இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .
  • சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
  • 1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி
  • 1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்
  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்
  • இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.
  • வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்
  • மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.

நகர அமைப்பு:

  • நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.
  • கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.
  • அகன்ற சாலைகள் - வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.
  • இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.
  • வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.
  • சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன.



பெருங்குளம்.

  • நீர் கசியாதிருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்கள்.
  • இரு பக்கங்களிலும் படிக்கட்டு.
  • உடைமாற்றும் அறைகள்.
  • தூய்மையான நீர் வரவும் , அழுக்குநீர் வெளியே செல்ல கால்வாய் வசதி.



கழிவு நீர்

  • கழிவு நீர், பாதாள சாக்கடை.
  • கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.
  • திறந்து பழுது பார்க்கும் வசதி
  • வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

வாழ்க்கை முறை

  • நகராட்சி நிருவாகம். - கடல் வணிகம்
  • வணிகத் தொடர்பு: மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்
  • தெரியாத விலங்கு: குதிரை. தெரியாத உலோகம்: இரும்பு.
  • ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.
  • முக்கிய உணவு: கோதுமை, பார்லி
  • பருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.
  • காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.
  • வெள்ளியை இறக்குமதி செய்தனர்.
  • நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்
  • பருத்தி கம்பளி நெய்தனர்.
  • வேட்டி - கீழ் ஆடை சால்வை - மேல் ஆடை
  • ஆண் பெண் - இருவரும் அணிகலன்
  • தங்கம் வெள்ளி - அணிகலன்
  • செம்பு வெண்கலம் - விளையாட்டு, ஆயுதம் , வீடு சாமான்
  • கைத்தொழில் - எழுத்து பணி , முத்திரை செய்வோர், கட்டிட பணி மர சாமான் செய்வோர்

எழுத்து முறை:

  • வலமிடருந்து இடமாகவும், மற்றும் வலமிருந்து இடம், தொடர்ந்து இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.
  • "சிந்துசமவெளி மொழி பண்டைய தமிழ் வடிவமே" - ஹிராஸ் பாதிரியார்.
  • தொல் தமிழ் எழுத்துடன் தொடர்பு

சுடுமண் முத்திரை

  • சுடுமண் (Terracotta) முத்திரைகளும் சுடுமண் உருவ பொம்மைகளும்
  • முத்திரைகளின் வடிவம் செவ்வகம். - 100+
  • சித்திர வடிவான எழுத்துகள் அதில் உள்ளன.
  • டெர்ரெர் கோட்டா - சுடுமண் பாண்டம்
  • பறவை விலங்கு ஆண் பெண் உருவம்
  • காளை , வண்டி, புறா, படகு , யோக நிலையில் ஒருவர் அமர்ந்துள்ள உருவம்.

சிற்பம் & சமயம்:

  • வெண்கல நாட்டிய மங்கை சிலை - மொகஞ்சதாரோ
  • தாடியுடன் கூடிய ஒருவரின் சுண்ணாம்பு கல் சிலை
  • வணங்கியவை - பசுபதி என்ற சிவன் , பெண் கடவுள் லிங்கம் சூலம், மரம்
  • இறந்தவர்களை தாழிகளிலிட்டு புதைத்தல் - அவர்களின் அணிகலன் சேர்த்து
  • சக்கரத்தை பயன்படுத்தி சட்டி பானை - பளபளப்பான வண்ணம் பூசப்பட்டு உள்ளன

பயன்பாட்டு அறிவியல்:

  • கட்டிட தொழில் , நிலம் தேறுதல்
  • மனை அளவீடு ..வடிவ கணித அமைப்பு
  • தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன

அழிவுக்கானக் காரணங்கள்

  • பெரும் தீ , உள்நாட்டு போர் சிந்து வெள்ள பேருக்கு
  • ஆரியர்களின் வருகை. படையெடுப்பு.

 

 

·         ஹரப்பா கால முக்கிய நகரங்கள்:

ஹரப்பா

-

பஞ்சாப், பாகிஸ்தான்

மொகஞ்சதாரோ

-

சிந்து, பாகிஸ்தான்

டோலாவிரா

-

குஜராத், இந்தியா

காலிபங்கன்

-

ராஜஸ்தான், இந்தியா

லோத்தல்

-

குஜராத், இந்தியா

பனாவலி

-

ராஜஸ்தான், இந்தியா

ராக்கிகார்ஹி

-

ஹரியானா, இந்தியா

சர்கோட்டடா

-

குஜராத், இந்தியா

 

No comments:

Post a Comment