தலைவர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

 

  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

  • "இந்திய ராணுவம் என்னும் படையை அமைத்து உலகையே திரும்பி பார்க்க வாய்த்த மாபெரும் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்."

இளமை காலம் :

  • நேதாஜி 23 ஜனவரி 1897-ல் கட்டாக்கில் பிறந்தார்.
  • சுபாஷ் சந்திர போஸின் தந்தையர் ஜானகிநாத் போஸ், இவர் ஒரு வழக்கறிஞர். தயார் பிரபாவதி தேவி.
  • 1911-ஆம் ஆண்டு கல்கத்தா மாகாணத்தில் நடைபெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார்.
  • பின்னர், பிரஸிடெண்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பேராசிரியர் ஒட்டன் (Professor Oaten) இந்தியாவிற்கு எதிராக பேசியதை கேட்ட போஸ் பேராசிரியரை தாக்கினார். இதனால், கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
  • பின்னர், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து 1918-ஆம் ஆண்டு B.A., தத்துவத்தில் பட்டம் பெற்றார்.
  • 1919-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்றார். கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள பிட்ஸ் வில்லியம் கல்லூரியில் சேர்ந்தார்.
  • 1920-ல் ஜூனில் நடந்த ICS (Imperial Civil Service Examination) எழுதி, அதில் நான்காவதாக வந்தார்.
  • நேதாஜி ஆங்கிலேயரின் கீழ் பணியாற்ற விரும்பவில்லை. எனவே, அவர் தனது பணியை 1921-ல் ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா வந்தார்.

அரசியல் பிரவேசம்:

  • "ஸ்வராஜ்" என்னும் செய்தித்தாளை தொடங்கினார்.
  • "சித்தரஞ்சன் தாஸ்" அவர்களை தனது அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.
  • 1923-ஆம் ஆண்டு அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராகவும், வங்காள மாநில காங்கிரஸின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சித்தரஞ்சன் தாஸ் தொடங்கிய பார்வர்ட் (Forward) என்னும் செய்தித்தாளின் ஆசிரியராக விளங்கினார். 1924-ஆம் ஆண்டு கல்கத்தாவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1925-ஆம் ஆண்டு நேதாஜி அவர்கள் கைது செய்யப்பட்டு மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் என்புருக்கி நோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார்.
  • 1927-ஆம் ஆண்டு போஸ் விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றார். ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காக உழைத்தார்.
  • 1928-ல் ஏப்ரலில் இந்திய சுதந்திர லீக் (Independence of India League) ஜவஹர்லால் நேரு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை செயலாளர்களாகவும், எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரை தலைவராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
  • நேதாஜி சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய தலைவராக உயர்ந்தார்.
  • 1930-ஆம் ஆண்டு கல்கத்தாவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1930-ஆம் ஆண்டின் மத்தியப்பகுதியில் ஐரோப்பாவிற்கு சென்றார். அங்கு பயில்கின்ற இந்திய மாணவர்களை சந்தித்தார். முசோலினியையும் சந்தித்தார்.
  • இக்காலகட்டத்தில் நேதாஜி "இந்தியாவின் போராட்டம்" (The Indian Struggle) என்ற நூலினை எழுதினார். இப்புத்தகம் 1920-1934 வரையிலான இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தது.
  • 1938-ஆம் ஆண்டு நேதாஜி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் இணைந்து தேசிய திட்டக்குழுவினை உருவாக்கினர்.

காங்கிரஸின் தலைவராதல் :

  • 1939-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (காந்தி பட்டாபி சித்தராமையாவை முன்னிறுத்தினார்).
  • 1938-ஆம் ஆண்டு நடந்த ஹரிபுரா காங்கிரஸ் மாநாடு மற்றும் திரிபுரியில் 1939-ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தலைமை தாங்கினார்.
  • தமிழகத்தில் முத்துராமலிங்க தேவர், தென்னிந்திய வாக்குகள் அனைத்தையும் நேதாஜிக்கு ஆதரவாக திரட்டி கொடுத்தார்.
  • பிறகு, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நேதாஜி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு உள்ளானார்.

தமிழகம் வருகை :

  • நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் 1939-ஆம் ஆண்டு பார்வர்டு ப்ளாக் என்ற அரசியல் சார்ந்த அமைப்பை ஜுன் 22-ல் தொடங்கினார். முழுமையாக இடதுசாரிகளின் ஆதரவை பெற நினைத்தார். வங்காளத்தில் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
  • தமிழகத்தில் நேதாஜிக்கு முழு ஆதரவு கொடுத்தவர். முத்துராமலிங்க தேவர், இவரும் பார்வர்டு ப்ளாக் கட்சியில் நினைந்தார். முத்துராமலிங்க தேவரின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 6 1939-ஆம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை புரிந்த அவரை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய மக்கள் பேரணியை முத்துராமலிங்க தேவர் நடத்தி காட்டினார்.

ஐரோப்பாவிற்கு செலுத்தல் :

  • 17 ஜனவரி 1941-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனி செல்ல திட்டமிட்டார்.
  • 1941 ஜனவரி 26 அன்று நேதாஜி ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா சென்றடைந்தார். 
  • பின்னர், அவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து ரோமிற்கு சென்றார். அங்கிருந்து, ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் இந்திய சுதந்திரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
  • அப்போது, ஹிட்லர் சுபாஷ் சந்திரா போஸை "நேதாஜி" என புனைபெயரில் அழைத்தார்.
  • (நேதாஜி - மரியாதைக்குரிய தலைவர் என்பது பொருள்).
  • உண்மையில் சுபாஷ் சந்திரா போஸை "நேதாஜி" என அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் அவார்.
  • 1941-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேதாஜி ஜெர்மனி வானொலியில் ஆற்றிய உரை பிரிட்டிஷ் இந்தியாவை அதிரவைத்தது.
  • அவர் இந்திய சுதந்திர மையத்தினை (Free India Centre) பெர்லினில் நிறுவினார்.
  • அச்சுப்படைகளால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காக போராடிய இந்திய கைதிகளை மீட்டு, அவர்களை கொண்டு இந்திய படையணியை(Indian Legion) உருவாக்கினார்.

இந்திய தேசிய ராணுவம் (INA):

  • இந்திய தேசிய ராணுவம் (INA) சிங்கப்பூரில் 1 செப்டம்பர் 1942-ஆம் ஆண்டில் ஜெனரல் மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இது ஜப்பானிற்கு உதவும் நோக்கதிற்காக ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பில் இருந்த ராணுவ வீரர்கள் ஜப்பானால் (Malayan Campaign (மலையான் பிரச்சாரம்) - 8 December 1941 – 31 January 1942) & (Battle of singapore (சிங்கப்பூர் போர்) - 8 to 15 February 1942) போது கைப்பற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்தியா ராணுவ வீரர்கள் ஆவர்.
  • பின்னர், இதன் தலைவராக ராஸ் பிஹாரி போஸ் செயல்பட்டார்.
  • 21 அக்டோபர் 1943-ஆம் ஆண்டு நேதாஜி அவர்களின் வருகைக்கு பின்னர், துவண்டுகிடந்த அப்பிரிவு விடுதலை படை என்னும் ரிதீயில் புதிய வடிவம் பெற்றது. ராஷ் பிஹாரி போஸ் அவர்கள் அமைப்பின் முழு பொறுப்பையும் நேதாஜியிடம் ஒப்படைத்தார்.
  • நேதாஜி புதிய ராணுவத்தை புத்தெழுச்சியுடன் உருவாக்கினார். INA-ல் தனியாக பெண்களுக்கென பிரிவு இருந்தது. "ஜான்சி ராணி ரெஜிமெண்ட்" என அழைக்கப்பட்ட அப்பிரிவின் தலைமை பொறுப்பை கேப்டன் லட்சுமி ஸ்வாமிநாதன் ஏற்றுக்கொண்டார்.
  • ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் உதவியுடன் 1944-ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியா தேசிய ராணுவ பேரணியில் "ரத்தத்தை தாருங்கள் சுதந்திரத்தை தருகிறேன்" (Give me blood, and I shall give you Freedom) என்ற புகழ் பெற்ற வாசகத்தை கூறினார்.
  • "ஜெய்ஹிந்த்" என்னும் உச்சரிப்பை இந்திய தேசிய ராணுவ வீரர்களின் புத்தெழுச்சிக்காக எடுத்துரைத்தார்.
  • மேலும், இந்திய தேசிய படை வீரர்களை ஊக்குவிப்பதற்காக "டெல்லி சலோ" (டெல்லியை நோக்கி செல்லுங்கள்) என்ற வாசகத்தை உருவாக்கினார்.
  • 18 ஆகஸ்ட் 1945-ல் தைபே, தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது.

Quotes:

இறைவன் நமக்கு செல்வத்தை
கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே.
நமக்கு உயிர் என்னும் பெரிய
செல்வத்தை கொடுத்திருக்கிறான்.
அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.”
-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

 

No comments:

Post a Comment