தலைவர் :மகாத்மா காந்தி

                      

மகாத்மா காந்தி 

 பிறப்பு மற்றும் பெற்றோர் :

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் பிறந்தார்.
  • இவரது பெற்றோர் : கரம்சந்த் காந்தி, புத்திலி பாய்.

இளமை காலம் :

  • காந்தி இளம் வயதிலேயே ஆங்கில புலமையும் நன்னடத்தையும் கொண்டவராக திகழ்ந்தார்.
  • இளம் வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரன் நாடகம் உண்மை மீது அவருக்கு ஆழ்ந்த பிடிப்பையும் சரவண பித்ருபதி நாடகம் பெற்றோரை போற்றும் பன்பையும்  அவருக்குள் ஏற்படுத்தின.
  • காந்தி சமல்தாஸ் கல்லுரியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். மே, 1883 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் என்ற பெண்மணியை மணந்தார்.
  • காந்தியின் குடும்பத்தினர் இவர் 'பாரிஸ்டர்' பட்டம் பெற வேண்டுமென விரும்பினர். 1888 ஆம் ஆண்டு காந்தி லண்டனுக்குச்  சென்றார். அங்குள்ள பல்கலைக்கழக கல்லூரியில் சட்டம் பயின்றார்.
  • வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்கு செல்லும் முன் தன தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சாத்தியங்கள் (மாமிசம் உண்ண மாட்டேன், மது அருந்த மாட்டேன், பெண்களிடம் ஒழுக்க குறைவாக நடக்க மாட்டேன்).
  • தன்னுடைய 24 ஆம் வயதில் தென்னாப்பிரிக்கா  சென்று அங்கு 21 ஆண்டுகள் (1893 - 1914)  வாழ்ந்தார்.
  • தென்னாப்பிரிக்கவாவில் இருந்தபோது அரசியல் பார்வை, மதிப்பீடுகள், தலைமை பண்புகள் போன்றவற்றை வளர்த்துக்கொண்டார்.

நிற வெறி :

  • காந்தி தென்னாப்ரிக்காவில் இருந்தபோது  நிறவெறி கொடுமைக்கு உள்ளானார் .
  • பீட்டர்மெரிட்ஸ்பர்க் (Pietermaritzburg) என்னுமிடத்தில் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய பயணச்சீட்டு வைத்திருந்தபோது அப்பயணத்திற்க்கான உரிமை மறுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டார்.
  • உணவகங்களில் உணவருந்தும் உரிமை, தலைப்பாகை அணியும் உரிமை போன்ற ஒவ்வொரு சின்னச்சின்ன உரிமைக்கும் தென்னாப்ரிக்காவில் போராட வேண்டியிருந்தது

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மற்றும் காங்கிரஸ்-ல் இணைத்தல்:

  • 1915 ஜனவரி 9 ஆம் நாள் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
  • அத்தினமே தற்போது வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • மேலும், கோபால கிருஷ்ண கோகுலேவின் மிதவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தியா தேசிய காங்கிரஸ் -ல் சேர்ந்தார்.

போராட்டங்கள் :

சாம்பரான் சத்தியாகிரகம் :

  • காந்தியடிகள் 1917, ஏப்ரல் 19 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் சத்தியாகிரக போராட்டமான "சாம்பரான் சத்தியாகிரகத்தை" பீகாரில் தொடங்கினார் .
  • (சாம்பரான்  மாவட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணவுப் பயிர்களைப் பயிரடாமல், காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரி(Indigofera tinctoria) முதலான பணப்பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதனால் அவர்களுக்குத் தேவையான உணவு கிட்டவில்லை. மேலும் அவுரிப் பயிரினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். 
  • 1910களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானது. விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரியொன்றை விதித்தது; அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதிகரித்தும் வந்தது.
  • இதனால் 1910களில் ஆங்காங்கே அரசுக்கு எதிராக கலகங்கள் மூண்டு வந்தன.
  • 1917ல் சாம்பரான் விவசாயிகளின் நிலை காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரஜகிஷோர் பிரசாத், ராஜேந்திர பிரசாத்அனுக்கிர நாராயண் சின்கா போன்ற வழக்கறிஞர்களுடன் சாம்பரான் வந்த காந்தி சம்பரண் போராட்டத்தை வரிகொடா இயக்கமாக மாற்றி அமைத்தார். மேலும் இது தேசியவாத, விடுதலைப் போராட்டம் இல்லையென்பதால் இந்திய தேசிய காங்கிரசு இதில் தலையிடாமல் தடுத்துவிட்டார்.)

அகமதாபாத் மில் வேலை நிறுத்த போராட்டம் :


  • அகமதாபாத் ஆனது  பம்பாய் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்ந்தது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த நகரம் பருத்தி தொழிலின் முக்கிய இடமாக திகழ்ந்தது.
  • 1918 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அகமதாபாத் மில் தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே "பிளேக் போனஸ்" வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
  • மில் உரிமையாளர்கள் "பிளேக் போனஸ்" தருவதை திரும்ப பெற விரும்பினர்.
  • தொழிலாளர்கள் 50 %  ஊதிய உயர்வு கோரினர். எனினும் உரிமையாளர்கள்   20 % மட்டுமே தருவதற்கு முன்வந்தனர்.
  • இந்த தருணத்தில் காந்தியடிகள் அனுசுயா பென் சாராபாய் (Anasuya Ben Sarabai) மற்றும் அவருடைய சகோதரர் அம்பாலால் சாராபாய் (Ambalal Sarabai) அவர்களால் அகமதாபாத் அழைக்கப்பட்டார்.
  • (அனுசுயா பென் சாராபாய் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்).
  • 1918' மார்ச் மாதம் அகமதாபாத் மில் அலை முன்பு உண்ணாவிரத போராட்டமானது காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது.
  • இது காந்தியடிகள் மேற்கொண்ட முதல் உண்ணாவிரத போராட்டம் ஆகும்.
  • இறுதியில் ஆலை  நிர்வாகம் தொழிலாளர்களுக்கு 33 % போனஸ் தருவதாக ஒப்புக்கொண்டது.

கேதா சாத்தியகிரகம் (Kheda Satyagraga):

  • குஜராத்தில், கேதா  என்னும் இடத்தில் விவசாயிகள் அடிக்கடி வறுமை, பஞ்சம், குறைந்த வளம், தீண்டாமை, குடிப்பழக்கம் மற்றும் பிரிட்டிஷ் பாகுபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
  • சப்பானிய அகலின் பஞ்சம் (The famine of Chhappania Akal) மற்றும் அடுத்தடுத்து இப்பகுதியில் ஏற்பட்ட சில பஞ்சங்களால், இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப்போய் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டு பட்டினியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.
  • இந்த நிலையில் பம்பாய் மாகாணம் 1917-1928-ஆம்  காலக்கட்டத்தில் வரிகளை 23 % அதிகரித்தது.
  • இக்காலகட்டத்தில் குஜராத்தின் கேதாவில் 17000 மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நேரத்தில் விதிக்கப்பட்ட வரியானது பெரும் கிளர்ச்சி ஏற்பட வழிவகை செய்தது.
  • வரி செலுத்தப்படவில்லை என்றல் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.
  • சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அவரது நண்பர்களான நர்ஹரி பாரிக், மோகன்லால் பாண்டியா, ரவிசங்கர் வியாஸ் அகியோர் இவ்வறிவிதிப்பிறகு எதிரான கிளர்ச்சியை பெருமளவில் கொண்டு சென்றனர். இந்த கிளர்ச்சி சர்தார் வல்லபாய்  படேலை மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக்கியது .
  • கேதாவில் உள்ள விவசாயிகள் சர்தார் வல்லபாய்  பட்டேலின் தலைமையில் ஒரு மனுவில் கையெழுத்திட்டு வரியானது குறைக்கப்பட வேண்டும் என எடுத்துரைத்தனர்.
  • இந்த கிளர்ச்சியானது குஜராத் சபா என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டது. காந்தி இதன் ஆன்மீக தலைவர் ஆவார் .
  • வரி செலுத்தப்படாதபோது சொத்துகளை கைப்பற்ற அரசாங்கம் முகவர்களை அனுப்பியது.
  • இதனை விவசாயிகள் எதிர்க்கவில்லை. ஆனால் தங்கள் பணத்தை குஜராத் சபைக்கு நன்கொடையாக அளித்தனர்.
  • இதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டிற்கான வரி இடைநிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட விவசாயிகளின் சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டன.

ஒத்துழையாமை இயக்கம்  (Non Cooperation movement) (1920-1922):

  • ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்தும், மொண்டேகு செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டத்தின் பயனின்மையை ஆங்கிலேயருக்கு உணர்த்தவும் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வது என காந்தியடிகள் அறிவித்தார்.
  • 1920-இல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் மூன்று நிலைகளில் கடைபிடிக்கப்பட்டது.
  • முதற்கட்டமாக, ஆங்கிலேய அரசிடமிருந்து பெற்ற பதிவுகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறந்தனர்.
  • இரண்டாவது கட்டமாக, வேலை நிறுத்தம் உட்பட பெரும் போராட்டங்களை நடத்தினர்.
  • அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • 1921-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரி செலுத்தக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. மூன்றாவது கட்டமாக வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது.
  • தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளுக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கியிருந்த கெய்சர்--ஹிந்த் என்ற பட்டத்தை 1920-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தியடிகள் துறந்தார்.

செளரி செளரா சம்பவம் (chauri chaura incident) (1922) :

  • ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தியடிகள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், எனினும் வன்முறைகள் பல இடங்களில் தொடர்ந்தன.
  • 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம்  நாள் உத்தரப்பிரதேஷத்தில் செளரி செளரா என்னும் இடத்தில் (கோரக்பூர்) ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் போது காவலர்கள் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். 
  • இதனால், கோபம் அடைந்த விவசாயிகள் துப்பாக்கி சூட்டிற்கு எதிராக காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர்.
  • இதனை கண்டு வருத்தமடைந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட்டார்.
  • ஆனால் காந்தியடிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனால் தேசிய இயக்க நடவடிக்கைகள் சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பெல்காம் காங்கிரஸ் மாநாடு (Belgum Congress Session) 1924 :

  • இந்திய தேசிய காங்கிரசின் 39-வது மாநாடு 1924-ஆம் ஆண்டு பெல்காமில் டிசம்பர் 26 & 27 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
  • இந்த மாநாடுக்கு தலைமை தாங்கியவர் காந்தியடிகள் அவர்.
  • இது காந்தியடிகள் பங்கேற்ற முதலாவது மற்றும் கடைசி காங்கிரஸ் மாநாடு ஆகும்.
  • இம்மாநாட்டில் இந்து - முஸ்லீம் ஒற்றுமை, சுதேசி பொருட்களை பயன்படுத்துதல், கதர் ஆடை நெய்தல், தீண்டாமைக்கு எதிரான கல்விமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.

சட்டமறுப்பு இயக்கம் அல்லது உப்பு சாத்தியக்ராம் (1930) :

 

  • முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாக கொண்டு காந்தியடிகள் 1930-ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.
  • பல லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரிவிதித்தது.
  • இது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்தது. எனவே காந்தியடிகள் இதனை எதிர்த்து மார்ச்' 12 1930-ஆம் ஆண்டு சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.
  • சாரோனி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி அசிரமத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கி, சுமார் 400 கி.மீ பயணம் மேற்கொண்டு குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள தண்டி வந்தடைந்தார். 
  • இது தண்டியாத்திரை அல்லது உப்பு சாத்தியகிரகம் என அழைக்கப்படுகிறது.
  • ஆயிரக்கணக்கான மக்கள் காந்தியடிகளுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
  • தண்டியில் கடல் நீரிலிருந்து உப்பு காய்ச்சி ஏப்ரல் 6-ஆம் நாள் உப்பு சட்டங்களை மீறினார். இதன் காரணமாக காந்தியடிகள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
  • தமிழ்நாட்டில் சி.ராஜகோபாலச்சாரியர் தலைமையில் திருச்சியில் இருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியில் வேதாரண்யத்தில் உப்பு சட்டங்களை மீறி உப்பு காய்ச்சினர்.

வட்ட மேசை மாநாடுகள் :

முதல் வட்ட மேசை மாநாடு (1930) :

  • சட்டமறுப்பு இயக்கத்தை ஆங்கிலேய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இந்தியா அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஆங்கில அரசு ஈடுபட்டது.
  • இதனால் 1930-ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல் வட்ட மேசை மாநாட்டினை கூட்டியது. 
  • சட்டமறுப்புக்கு இயக்கம் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.இதனால் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.

காந்தி - இர்வின் ஒப்பந்தம் (1931) :

  • முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்ததால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே பிரிட்டிஷ் அரசு இர்வின் பிரபுவை, காந்தியை சந்திக்க இந்தியாவிற்கு அனுப்பியது. 
  • இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் 1931-ஆம்  ஆண்டு காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவொப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
  • இதற்கு கைமாறாக ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்வது என்றும் உப்பு சட்டங்களை திரும்பப்பெறுவது என்றும் ஒப்புக்கொண்டது.

இரண்டாவது வட்டமேசை மாநாடு (1931) :

  • இரண்டாம் வட்டமேசை மாநாடு இலண்டனில் 1931-ல் நடைபெற்றது. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்படி, காந்தியடிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சனை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் இந்த மாநாட்டில்  எட்டப்படவில்லை. எனவே, காந்தியடிகள் பெருத்த ஏமாற்றமத்துடன்  நாடு திரும்பினார். 
  • காந்தி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. இதனால் சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.

வகுப்புவாத அறிக்கையும் பூனா ஒப்பந்தமும் :

  • 1932-இல் காந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இங்கிலாந்து பிரதமர் ராம்சே-மெக்டொனால்டு  வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சிறும்பான்மையினருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் , தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தை தாழ்த்தப்பட்ட இன மக்களின் தலைவரான டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் வரவேற்றார். காந்தி இதனை ஏற்க மறுத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு  அம்பேத்காருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப்பின் தனது  உண்ணாவிரதத்தை கைவிட்டார். இவுடன்படிக்கையின்படி  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான  தனித்  தொகுதி ஒதுக்கீடு கைவிடப்பட்டது. சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக அளவு எண்ணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது
  • இதன் மூலம் ஹிந்துகளிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களை தனியாக பிரிக்கும் ஆங்கிலேயர்  சூழிச்சி தோல்வியடைந்தது.

மூன்றாம் வட்டமேசை மாநாடு (1932) :

  • 1932-ஆம்  ஆண்டு மூன்றாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் இதில் பங்கு பெறவில்லை. எனவே  இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.

கிரிப்ஸ் தூதுக்குழு (Cripps Mission) 1942 :

  • இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் இங்கிலாந்திற்கு எதிராக ஈடுபட்டது. இங்கிலாந்து போரில் வெற்றிபெற இந்தியாவின் உதவி தேவைப்பட்டது.
  • எனவே காங்கிரஸின் ஒத்துழைப்பை பெறவும், இந்தியா அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் 1942-ஆம்  ஆண்டு சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் இரண்டு பேர் கொண்ட ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது.    (மற்ற இருவர் : .வி.அலெஸ்சாண்டர் & பெத்திக் லாரன்ஸ்)
  • இக்குழு "கிரிப்ஸ் தூதுக்குழு" என்று அழைக்கப்பட்டது. இக்குழு இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு உதவிகரமாக இந்தியா இருக்க வேண்டும் என அறிவித்தது.
  • போருக்குபின் டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை
  • எனவே, காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதிமொழிகளை திவாலாகிக்கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டார்
  • கிரிப்ஸ் தூதுக்குழு தோல்வியடைந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942:

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி, காந்தியடிகளின் போக்கில் மாற்றங்களை கொண்டு வந்தது.
  • அதுவரை அவர் பின்பற்றி வந்த அகிம்சை வழிகள் எத்தகைய பலனையும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்தார்.
  • எனவே, ஆங்கிலேயர் இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கோரினார் .
  • இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வெற்றிமேல் வெற்றிகளை குவித்து கொண்டே சென்றது.
  • எனவே, ஆங்கிலேயர்கள் இனி இந்தியாவில் இருந்தால் ஜப்பான் இந்தியா மீது  படையெடுக்க கூடும் என காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்தனர்.
  •  
  • இதனால், 1942-ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம்  நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்ககள் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தது.
  • மும்பையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் காந்தியடிகள் ஆற்றிய மறக்க முடியாத சொற்பொழிவை தொடர்ந்து அத்தீர்மானம் நிறைவேறியது.
  • முழு சுதந்திரம் தவிர வேறு எதனாலும் நன் திருப்தி அடையமாட்டேன். நாம் அதற்காக வாழ்வோம் அல்லது வீழ்வோம். இந்தியாவை விடுதலை பெற செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்றார்.
  • உண்மையில் அவரது பேச்சு மிகப்பெரிய அளவிலான ஆயுதமற்ற புரட்சிக்கு எழுச்சி குரலாக அமைத்தது.
  • அதற்கு அடுத்த நாளே காந்தி, நேரு, அபுல்கலாம் அசாத் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 
  • சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நாடெங்கும் வன்முறை கலவரங்கள் வெடித்தன.
  • இரண்டாம் உலக போர் 1945-ஆம் ஆண்டு முடிவடைந்தது. போருக்கு பின் இங்கிலாந்தில் தொழிற் கட்சி வெற்றி பெற்று கிளமண்ட் அட்லீ  தலைமையில் ஆட்சி அமைத்தது. 
  • தொழிற் கட்சியின் தலைவர் அட்லீ இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.
  • காங்கிரஸ் மீது  ஆங்கில அரசு விதித்திருந்த தடை உத்தரவுகளையும் விலக்கினார்.
  • அட்லீ இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு குழுவை அமைத்தார். 
  • அக்குழு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பரிந்துரைத்தது.

பிற குறிப்புகள் :

  • காந்தியடிகள் குழந்தை திருமணம், தீண்டாமை, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள், சதி போன்றவற்றிற்கு எதிராக போராடினார். எனவே பெண்கள் மத்தியில் காந்தியடிகளின் செல்வாக்கு உயர்ந்தது.
  • காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை "ஹரிஜன்" கடவுளின் குழந்தைகள் என அழைத்தார்.
  • காந்தியடிகள் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனவரி 30ம் நாள் இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

  • காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக (Internation Day for Non-Violence) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • காந்தி தனது சுயசரிதையை நவஜீவன் இதழில் குஜராத்தி மொழியில் சத்யசோதனை என்ற பெயரில் எழுதினார்.
  • காந்தியடிகள் தன்னுடைய அரசியல் குருவாக கோபால கிருஷ்ணா கோகுலேவை பின்பற்றினர்.
  • காந்தியடிகளை "மென்மைமிகு தலைவர்" என்று முஹமது அலி ஜின்னா-ஆல் அழைக்கப்பட்டார்.
  • காந்தியின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு "The Story of My Experients with Truth" என்ற பெயரில் மொழி பெயர்த்தவர் மகாதேவ் தேசாய் ஆவார்.
  • காந்தி யங் இந்தியா என்ற ஆங்கில இதழை இந்தியாவில் நடத்தினார்.
  • காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழின் பெயர் "இந்தியன் ஒப்பீனியன்".
  • காந்தியை முதன்முதலாக மகாத்மா என்றவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். ஆனால் தாகூருக்கு முன்பே பாரதியார் தனது கவிதையில் காந்தியை மகாத்மா என்று குறிப்பிட்டு இருந்தார்.
  • காந்திஜியை முதன்முதலில் "தேசப்பிதா" (Father of Nation) என்று அழித்தவர் நேதாஜி.
  • காந்திஜியின் பெயரை தமிழில் "காந்தியடிகள்" என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலாக ஏற்படுத்தியவர் திரு.வி.கா.
  • காந்தியடிகள் சிறையில் கழித்த மொத்த நாட்கள் 2,338.
  • காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எரவாடா, பூனா.

No comments:

Post a Comment