தலைவர் : வ.உ.சிதம்பரனார்

 

 ..சிதம்பரனார் 

பிறப்பு :

  • பிறந்த ஊர் : ஓட்டப்பிடாரம்.
  • பெற்றோர் : உலகநாதன் பிள்ளை, பார்வதி அம்மையார்.
  • பிறந்த நாள் : 05.09.1872.

கல்வி :

  • அடிப்படை கல்வி : ஓட்டப்பிடாரம்.
  • உயர்நிலைக்கல்வி : தூத்துக்குடி.
  • சட்டக்கல்வி : திருச்சி - 1895-ல் வழக்கறிஞராக பதிவு.

இளமைக்காலம் மற்றும் பொதுவாழ்க்கை :

  • பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு 1905-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
  • தூத்துக்குடியில் சுதேசி பண்டகசாலை, தருமசங்க நெசவு, சுதேசி பிரச்சார சபை, தேசிய கிடங்கு, சென்னை வேளாண் தொழிற்சங்கம் லிமிடெட் ஆகியவற்றை நிறுவினார்.
  • தூத்துக்குடி கோரல் மில் (தற்போது இது 'மெஜீராகோட்ஸ்' மில்லின் ஒரு பகுதி) தொழிலாளரிடையே 1908 பிப்ரவரி 23-இல் ..சி உரையாற்றினார்.
  • சம்பள உயர்வு, வாராந்திர விடுமுறை, மேம்பட்ட பணிச்சூழல் ஆகியவற்றை ஆதரித்து பேசினார்.  
  • எழுச்சி மிக்க அவரது உரையால் உத்வேகமுற்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.
  • ..சி உரையாற்றிய 4 நாட்களுக்கு பின் தொடங்கிய வேலைநிறுத்தம் திவீரமடைந்தது. எனவே, நிர்வாகம் இறங்கி வந்தது.
  • ..சி-ம், 50 தொழிலாளர்களும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
  • அதன்பின்பு, சம்பள உயர்வு, வேலைநேர குறைப்பு, ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிப்பது போன்ற சலுகைகளை வழங்குவதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
  • 9 நாட்கள் நீடித்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
  • "கோரல் மில் வேலைநிறுத்தம்" அடைந்த வெற்றி பிற ஐரோப்பிய நிறுவனங்களிலும் எதிரொலித்தது.
  • அவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மேம்பட்ட பனிச்சசூழல்களை அடைவதற்கு இது வழிவகுத்தது.
  • அரவிந்தர் தனது "வந்தே மாதரம்" நாளிதழில் மார்ச் 13, 1908 அன்று, ..சி, சுப்ரமணிய சிவா - ஆகியோரின் சளைக்காத போராட்ட ஆற்றலையும் பாராட்டி எழுதியிருந்தார்.

கப்பலோட்டிய தமிழன் :

  • பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, அன்றைய பிரிட்டிஷ் அரசின் முழு ஆதரவுடன் கப்பல் போக்குவரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
  • அதற்கு, எதிராக தூத்துக்குடியில் 1906-ஆம் ஆண்டு அக்டோபர்- 16 -இல்  "சுதேசி நாவாய் சங்கம்" என்கிற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். 
  • இதன், தலைவர்/இயக்குனராக மதுரை தமிழ் சங்கத் தலைவர் பொறுப்பு வகித்த பாண்டித்துரை தேவர் (பாலாவ நத்தம் ஜமீந்தார்)தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இதன், செயலாளராக ..சி-ம், சட்ட ஆலோசகராக சேலம் சி.விஜயராகவாச்சாரியாரும் பணியாற்றினார்.
  • இந்நிறுவன மூலதனம் 10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. தலா ரூ.25 விலையில் 40,000 பங்குகள் விற்பது என முடிவு செய்யப்பட்டது.
  • எந்த ஆசியரும் இந்நிறுவனத்தில் உறுப்பினர் ஆகலாம். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் ரூ.2,00,000 கொடுத்து 8,000 பங்குகளை பெற்றுக்கொண்டார். இந்நிறுவனத்தில் முதல் மூலதனம் அதுதான்.
  • தொடக்க நிலையில் இந்நிறுவனதிற்கு என தனியாக சொந்த கப்பல் ஏதுமில்லை. ஷாலைன் ஸ்டீயர்ஸ் நிறுவனத்திலிருந்து கப்பல்களை குத்தகைக்கு பெற்று நடத்தப்பெற்றது.
  • பிரிட்டிஷ் இந்தியா கப்பல் கம்பனியின் நிர்பந்தம் காரணமாக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
  • இலங்கையில் இருந்து ஒரு பெரிய கப்பலை ஒப்பந்தம் செய்தார் ..சி. இந்தியா முழுவதும் திரிந்து பங்குகளை விற்று மூலதனம் திரட்டினார். எஸ்.எஸ்.காலியா என்ற கப்பலை முதலில் வாங்கினார். அடுத்து பிரான்ஸ்-ல் இருந்து எஸ்.எஸ்.லோவோ என்ற கப்பலை வாங்கினார்.
  • இக்கப்பல்களை வாங்குவதற்காக பயணப்பட்ட போது "திரும்பி வரும் பொது கப்பல்களுடன் தன வருவேன்; இல்லாவிட்டால் கடலிலே வீழ்ந்து மடிவேன்" என்று சபதம் மேற்கொண்டார்.
  • ..சி, குழுவினரின் சுதேசி நிறுவன போட்டியை சமாளிக்க, பிரிட்டிஷ் நிறுவனம், பயணி ஒருவருக்கு தலா ரூ.1 (பன்னிரெண்டு அணா) மட்டுமே கட்டணம் வசூலித்தது.
  • சுதேசி நிறுவனம் தன் கட்டணத்தை 50 காசுகள் மட்டுமே என குறைத்து. உடனே பிரிட்டிஷ் நிறுவனம், பயணிகளுக்கு இலவச பயணச்சலுகையுடன் தலா ஒரு குடையையும் அன்பளிப்பாக தருவதாக அறிவித்தது.
  • எனினும், அப்போதைய தேசபக்தி உணர்ச்சி வெள்ளம் காரணமாக மக்கள் சுதேசி நிறுவன கப்பலில் மட்டுமே பயணம் செய்தனர்.
  • எனவே, சிதம்பரனாருக்கு பண ஆசை காட்டி அவரை விலைக்கு வாங்க பிரிட்டிஷ் நிறுவனம் முயன்றது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
  • தூத்துக்குடிக்கு, கொழும்புக்கும் இடையே முறையான கப்பல் போக்குவரத்தை சுதேசி கப்பல் நிறுவனம் தொடர்ந்து நடத்தியது.பிரிட்டிஷ் நிறுவனமும், அரசும் கடுமையாக எதிர்த்தன.

சிறைவாசம்:

  • ..சி-ன் தொடர்ச்சியான சுதந்திர போராட்ட நடவடிக்கைகளால் ஆங்கிலேய அரசு ஆத்திரமடைந்து.
  • தூத்துக்குடியில் 1908 மார்ச் 9 அன்று பிபின் சந்திரபால் சிறை மீண்ட விடுதலை நாள் கொண்டாடப்பட்டது.
  • அன்றைய கூட்டத்தில் ..சி-ம், சுப்ரமைய சிவா-ம் ஆற்றிய உரைகள் மக்கள் நடுவே பேரெழுச்சியை தோற்றுவித்தன. அந்த நிகழ்வின் போது அவர்களிருவரும் அரசாங்கத்தை அவமதித்ததாகவும் பிரிட்டிஷ் அரசி எதிர்த்து சுதந்திரப்போரில் ஈடுபடுமாறு பொதுமக்களை தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ..சி மீது, வழக்கு பதிவு செய்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
  • அரசை எதிர்த்ததற்காக 20 ஆண்டுகளும் சுப்ரமணிய சிவாவிற்கு உடந்தையாக இருந்ததற்க்காக 20 ஆண்டுகளுமக மொத்தம் 40 ஆண்டுகள் அந்தமான் தீவுச்சிறையில் ..சி இருக்கவேண்டுமென திருநெல்வேலி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி A.F.பின்ஹே தீர்ப்பளித்தார்.
  • இதை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டின் விசாரணை முடியும் வரை ..சி- அந்தமானுக்கு அனுப்ப இயலாது. எனவே, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் அவருக்கு செக்கிழுத்தல் உட்பட கடுமையான பணிகள் செய்தாக வேண்டிய நிர்பந்தம் உருவானது.
  • சிறைவாசம் முடிந்து ..சி 1912 டிசம்பர் 11 அன்று விடுதலையானார். காங்கிரஸிலிருந்து 1920-ல் விலகினார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு திரும்பி போக அவர் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய வழக்கறிஞர் பணி அனுமதியும் பறிக்கப்பட்டது.
  • சென்னைக்கு மனைவியுடனும், இரு மகன்களுடனும் வந்து ஒரு மளிகை கடையையும், மண்ணெண்ணெய் கைடையையும் நடத்தினார்.
  • மீண்டும் வழக்கறிஞர் தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கோவை நீதிபதி .எச்.வாலேஸிடம் முறையிட்டார். அவர் அனுமதியளித்தார். எனவே, அவரது நன்றியை காட்டும் வகையில் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" எனப் பெயரிட்டார்.
  • கோவில்பட்டிக்கு சென்று அங்கு வழக்கறிஞர்-ஆக பணியாற்றினார்.காங்கிரஸ் கட்சியில் 1927-ல் மீண்டும் சேர்ந்தார். சேலம் நகரில் அக்கட்சியின் மூன்றாவது அரசியல் மாநாடுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை "எனது அரசியல் பெருஞ்சொல்" நூலாக வெளிவந்தது. எனினும் அந்த மாநாடிற்கு பின் வெகு விரைவிலேயே காங்கிரசை விட்டு விலகினார்.

..சி எழுதிய நூல்கள் :

    • மெய்யறம் - 1914.
    • மெய்யறிவு - 1915.
    • கவிதை தொகுதி (தனிப்பாடல் திரட்டு) - 1915.
    • திருக்குறள் - மணக்குடவர் உரை - 1917.
    • தொல்காப்பியம் - இளம்பூரணார் உரை - 1928.
    • சுயசரிதை - 1946.
  • பல இதழ்களில் கட்டுரை மொழிபெயர்ப்புகள் - "அமைதிக்கு மார்க்கம்", "சாந்திக்கு மார்க்கம்" போன்ற ஜேம்ஸ் ஆலனின் சுயமுன்னேற்ற நூல்கள் - ஆங்கிலத்திலிருந்து தமிழில்.
  • நடத்திய இதழ்கள் - விவேகபானு, இந்துநேசன்.

இறப்பு :

  • தென்னாட்டு திலகர், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார், 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் இயற்கை எழுதினார்.
  • இந்தியா அரசு இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 5, 1972-ல் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ..சிதம்பரனார் துறைமுகம் என பெயரிட்டுச் சிறப்பு செய்துள்ளது.

 

No comments:

Post a Comment