HISTORY:SOUTH INDIAN HISTORY

 

தென்னிந்திய வரலாறு :

  • பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டிய நாடு என முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது.
  • பின்னர் களப்பிரர்கள் பி.பி. 300- 600 வரையில் சுமார் 300 ஆண்டுகள் வரையில் ஆட்சி செய்தனர். அது இருண்டகாலம் எனப்பட்டது.
  • பின்னர் மீண்டும் சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகள் ஆட்சி செய்தது.

பல்லவர்கள் :

  • தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்.
  • இவர்கள் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.
  • பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
  • பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்ற மூன்று பிரிவினர்கள் உள்ளனர்.
  • பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என மரபு நீள்கிறது.
  • பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.
  • பிற்கால பல்லவ மரபை சிம்ம விஷ்ணு காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு தொடங்கினார். இவர் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை மீட்டு பல்லவ பேரரசை தொடங்கினார்
  • இவரை அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார்.

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி 600 - 630)

  • சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம் மகேந்திரவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு மகேந்திர விக்ரமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
  • இவர் விசித்திரசித்தன் எனப் புகழப்பட்டார். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும், கல்வியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு.
  • இவர் முதலில் சமணனாக இருந்தார். பின்னர், சைவ சமயத் தொண்டரான திருநாவுக்கரசர் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினார்.
  • இவர் குடைவரைக் கோயிலைக் அறிமுகப்படுத்தினார். மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் குடைவரைக் கோயில்களைக் அமைத்தார்.

முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668)

  • முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் அரியணை ஏறினார் . இவனது காலத்தில் அரசியல், பண்பாடு ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கனார்.
  • இவரது காலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
  • மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் ரதங்கள் இவரது காலத்தில் கட்டப்பட்டவை.

இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 691 -728)

  • முதலாம் நரசிம்மவர்மனைத் தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மனும், முதலாம் பரமேஸ்வரவர்மனும் ஆட்சிக்கு வந்தனர்.
  • அவர்களது ஆட்சிக் காலத்திலும் பல்லவ சாளுக்கிய மோதல்கள் தொடர்ந்தன. பின்னர் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான். அவன் ராஜசிம்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவனது ஆட்சிக்காலம் போர்களற்ற அமைதிக் காலமாக விளங்கியது.
  • கலை, கட்டிடக் கலையில் அவனது கவனம் திரும்பியது. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் ஆலயம் ஆகியன அவனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. கலை இலக்கியத்தையும் அவன் ஆதரித்துப் போற்றினான்.
  • இவர் இராஜசிம்மன் எனவும் அழைக்கப்படுகிறார்.
  • இவரது காலத்தில் சீனாவுடன் வணிக உறவு ஏற்பட்டது.

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் :

  • இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே பகைமை உச்சக்கட்டத்தை அடைந்தது.
  • அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது போர் தொடுத்தான். இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான். கங்காகளோடு நடைபெற்ற போரில் இவர் கொல்லப்பட்டார். இவருடன் பிற்கால பல்லவ மரபு முடிவுற்றது.

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி 731 - 796)

  • பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ நாட்டிற்கு மன்னன் ஆனான். இவர் சிறந்த விஷ்ணுபக்தராவார். திருமங்கை ஆழ்வார் இவரது சமகாலத்தவர்.
  • மூன்றாம் இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியிலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம், முத்தீச்சுவரர் ஆலயம் முதலிய கோயில்களையும் கட்டினான்.
  • இவனது காலத்தில் கல்வியின் நிலை ஓங்கி இருந்தது. கல்வி நிலையங்கள் அதிகமாக துவங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் நந்திவர்மன் அவன் காலத்துப் பட்டயங்களைக் கிரந்தத் தமிழில் வெளியிட்டான். இதனால் தமிழ்மொழி இவனது ஆட்சியில் சிறப்புப் பெற்றது.

பல்லவ பேரரசின் வீழ்ச்சி :

  • கடைசி பல்லவ பேரரசர் அபராஜிதன் ஆவார். இவரை சோழமன்னன் ஆதித்த சோழன் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை சோழ நாட்டுடன் இணைத்தார். இத்துடன் பல்லவ ஆட்சி முடிவுற்றது.

பல்லவர்களின் நிர்வாகம் :

  • பல்லவர்கள் தனது ஆட்சி பரப்பை ராஷ்டிரம் என்ற பல மண்டலங்களாகவும், மண்டலம் பல கோட்டங்களாகவும், பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன.
  • உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் இருந்தன.
  • நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் ஆகும்.
  • கிராமத்தில் ஏரிவாரியம், தோட்ட வாரியம் என 20 வாரியங்கள் இருந்தன.

கட்டடக்கலை :

  • மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும்.
  • மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும். இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன.

சோழப்பேரரசு :

சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது.

  • மகாபாரதத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிலும், மெகஸ்தானிஸ், தாலமி, ஆகியோரது குறிப்புகளிலும் சோழர்களின் செய்தியைக் காணமுடிகிறது.
  • அவர்களது இலச்சினையாக புலி உருவம் ஆகும்.
  • கரிகால சோழன் சங்ககால சோழர்களில் புகழ் பெற்றவராவார். கல்லணையை கட்டியவரும் இவரேயாவார்.

பிற்கால சோழர்கள் :

  • சங்க காலத்தில் வாழ்ந்த சோழர்கள் முற்கால சோழர்கள் எனவும், களப்பிரர் காலத்தில் வாழ்ந்த சோழர்கள் இடை கால சோழர்கள் எனவும், அதன் பின் கி.பி 850- 1281 வரை வாழ்ந்த சோழமன்னர்கள் பிற்கால சோழர்கள் எனப்பட்டனர்.
  • கி.பி 850 விஜயாலய சோழன் முத்திரைகளிடம் இருந்து தஞ்சாவீரை கைப்பற்றி பிற்கால சோழ மரபைத் தோற்றுவித்தார். தஞ்சாவூர் இவரது தலைநகரமாகும்.
  • பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விஜயாலய சோழன் ஆவான்.
  • ஆதித்த சோழன், பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்காற்றினார். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினார்.
  • முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கி.பி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .
  • பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டார். ஆகையால் இவரை மதுரை கொண்டான் எனப்பட்டார்.
  • பராந்தகன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரையை வேய்ந்தார்

இவருக்கு பிறகு ஆட்சி செய்தவர்கள் :

  • கண்டராதித்தன் - கி.பி. 949 - 957
  • அரிஞ்சய சோழன் - கி.பி. 956 - 957
  • சுந்தர சோழன் - கி.பி. 956 - 973
  • உத்தம சோழன் - கி.பி. 965 - 985

முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி 985 - 1014)

  • கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்தார்.
  • சோழ மரபில் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜ சோழனாவார்.
  • சேரர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் ஆகியோரை போரில் தோற்கடித்தார்.
  • முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத் தீவுகளையும் வென்றார்.
  • மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிறுபாதசேகரன் என்ற பட்டப் பெயர்களை பெற்றிருந்தார்.
  • இவர் சைவ சமயத்தை போற்றினார். இவரது காலத்தில் தான் தேவாரம் தொகுக்கப்பட்டது.

முதலாம் இராஜேந்திரன் (கி.பி 1012 - 1044)

  • இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது.
  • மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர் ஆவார். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.
  • இவருக்கு கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பண்டிதசோழன் என்ற பட்டப் பெயரும் உண்டு.

இவருக்கு பின் ஆட்சி செய்தவர் :

  1. முதலாம் இராசாதிராசன் - கி.பி. 1018 - 1054
  2. இரண்டாம் இராசேந்திர சோழன் - கி.பி. 1056 - 1064
  3. வீரராஜேந்திர சோழன் - கி.பி. 1063 - 1070
  4. அதிராஜேந்திர சோழன் - கி.பி. 1067 - 1070

பாண்டிய பேரரசு :

தற்போதைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களையும், திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியும், திருவாங்கூரின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

முதலாம் பாண்டிய பேரரசு (கி.பி 550 - 950)

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கடுங்கோண் களப்பிரர்களை வென்று முதலாம் பாண்டியப் பேரரசை தோற்றுவித்தார்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் :

முதலாம் மாறவர்கள் குலசேகரன் இலங்கையையும், சேரர்களிடமிருந்து கொல்லம் பகுதியையும் வென்றார். இதனால் கொல்லம் கொண்ட பாண்டியன் என புகழப்பட்டார்.

பாண்டிய அரசின் வீழ்ச்சி :

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி பொறுப்பை மாலிக்கபூர் சுந்தரபாண்டியனிடம் ஒபடைத்தார். இதனையடுத்து துக்ளக் மரபின் ஆதிக்கத்தாலும், அவர்களுக்கு பின் மதுரை சுல்தான்களின் எழுச்சியும் பாண்டிய அரசின் முடிவுக்கு காரணமாயிற்று.

வரலாறு வினா - விடைகள்

  1. பல்லவர்கள் சம்பந்தப்பட்ட குகைக் கோயில் அமைந்துள்ள இடம் - திருக்கழுக்குன்றம்
  2. களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை நிறுவியவர் யார் - சிம்ம விஷ்ணு
  3. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர்? - முதலாம் நரசிம்ம வர்மன்
  4. முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசர்? - இரண்டாம் புலிகேசி
  5. குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவர்? - முதலாம் மகேந்திர வர்மன்
  6. முதலாம் மகேந்திர வர்மன் படைத்த ஓவிய நூல்? - தட்சிண சித்திரம்
  7. சமணரான முதலாம் மகேந்திரவர்மனை சைவத்துக்கு மாற்றியவர்? - திருநாவுக்கரசர்
  8. காவிரி நாடன்,கடற்ப்படை அவனி நாரணன் என்று அழைக்கப்பட்டவர்? - மூன்றாம் நந்தி வர்மன்
  9. முதலாம் மகேந்திர வர்மனின் இசை ஆர்வத்தைக் காட்டும் கல்வெட்டு? - குடுமியான் மலை கல்வெட்டு
  10. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர்? - முதலாம் நரசிம்ம வர்மன்
  11. வணிகர் சங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது? - மணி கிராமம்
  12. இராஜ சிம்மன் என்று அழைக்கப்பட்டவர்? - இரண்டாம் நரசிம்ம வர்மன்
  13. சேத்தகாரி, சங்கீரன ஐதி என்று அழைக்கப்பட்டவர்? - முதலாம் மகேந்திர வர்மன்
  14. முதலாம் மகேந்திர வர்மன் இயற்றிய நாடக நூல் எது? - மத்த விலாசம்
  15. ஆகமப் பிரியன் என்று அழைக்கப்பட்டவர்? - இரண்டாம் நரசிம்ம வர்மன்
  16. தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்று புகழப்படுபவர்? - மூன்றாம் நந்தி வர்மன்
  17. வாத்திய வித்தியாதரன் என்று அழைக்கப்பட்டவர்? - முதலாம் நரசிம்ம வர்மன்
  18. கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்? - தேவதானம்
  19. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்? - பிரம்மதேயம்
  20. மதுரை திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர்? - வஜ்ஜிரனந்தி
  21. சித்திரக்கார புலி என்று அழைக்கப்பட்டவர் ? - முதலாம் மகேந்திர வர்மன்
  22. உலகின் சிங்கம் அல்லது அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர்? - சிம்ம விஷ்ணு
  23. துக்ளக் மரபைத் தோற்றுவித்தவர்கள்? - கியாசுதீன் துக்ளக்
  24. மௌரிய வம்சத்தின் தலை சிறந்த மன்னர்? - அசோகர்
  25. பண்டைத் தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது - புலவர்களின் கூட்டம்
  26. ஜாவா மற்றும் சுமத்திராவைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய இந்திய அரசர் யார்? - இராஜேந்திர சோழர்
  27. மதுரை கொண்டான் என்று சிறப்புப் பெயர் பெற்றவர் - முதலாம் பராந்தகன்
  28. பிற்கால சோழர்களின் சிறந்த சோழ மன்னர் - இராஜராஜ சோழன்
  29. குடைவரைக் கோயில்களை தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள் - பல்லவர்கள்
  30. சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி - உப்பாயம்
  31. மாமல்லப்புரத்தில் கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்
  32. பல்லவர்களின் ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
  33. தென்னிந்திய வரலாற்றில் ....... காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும் - சங்க காலம்
  34. இரண்டாவது தமிழ் சங்கம் எங்கு நடைபெற்றது - கபாடபுரம்
  35. சங்க கால தமிழகத்தில் .. ... ஆகிய மரபுகள் ஆட்சி புரிந்தனர் - சேரர், |சோழர், பாண்டியர்
  36. சேரர்களின் தலைநகரம் எது? - வஞ்சி
  37. மூன்றாவது தமிழ் சங்கத்தை மதுரையில் ............ என்ற பாண்டிய மன்னன் நிறுவினான் - முடத்திருமாறன்
  38. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர் - முதலாம் இராஜேந்திரன்
  39. பல்லவ மன்னர்களில் சித்ரகாரப் புலி என்ற பட்டத்தைப் பெற்றிருந்தவர் - முதலாம் மகேந்திரவர்மன்
  40. மத்த விலாசன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தவர் - முதலாம் மகேந்திரவர்மன்
  41. புகழூர் கல்வெட்டு என்பது?- சேரர்களைப் பற்றியது
  42. தக்கோலப் போரில் தோல்வியடைந்த சோழ அரசர் - முதலாம் பராந்தகன்
  43. கடாரம் வென்றான் என அழைக்கப்படுபவன் - முதலாம் இராசேந்திரன்
  44. யாருடைய ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை? - பல்லவர்
  45. வாதாபியை அழித்த போது பல்லவ படைத்தளபதியாக இருந்தவர் - பரஞ்சோதி
  46. தஞ்சை சிவன் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராசர் - ஒரு சோழ மன்னர்
  47. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தை கட்டியவர் - இரண்டாம் மகேந்திரவர்மன்
  48. சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களைன் சிறப்பான அம்சம் - விமானங்கள்
  49. பண்டைய சேர மரபில் யார் புகழ்மிக்கவர்? - செங்குட்டுவ
  50. கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர் - முதலாம் ராஜேந்திரன்

51.களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை நிறுவியவர்- சிம்ம விஷ்ணு
52.
உலகின் சிங்கம் அல்லது அவனி சிம்மன் - சிம்ம விஷ்ணு
53.
முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசர்- இரண்டாம் புலிகேசி
54..
குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவர்- முதலாம் மகேந்திர வர்மன்
55.
முதலாம் மகேந்திர வர்மன் படைத்த ஓவிய நூல்- தட்சிண சித்திர
56.
சேத்தகாரி,சங்கீரன ஜதி என்று அழைக்கப்பட்டவர்- முதலாம் மகேந்திர வர்மன்
57.
முதலாம் மகேந்திர வர்மன் இயற்றிய நாடக நூல் - மத்த விலாசம்
58.
சமணரான முதலாம் மகேந்திரவர்மனை சைவத்துக்கு மாற்றியவர்- திருநாவுக்கரசர்
59.
முதலாம் மகேந்திர வர்மனின் இசை ஆர்வத்தைக் காட்டும் கல்வெட்டு- குடுமியான் மலை கல்வெட்டு
60.
வாதாபி கொண்டான் - முதலாம் நரசிம்ம வர்மன்
61.
மாமல்லன் - முதலாம் நரசிம்ம வர்மன்
62.
வாத்திய வித்தியாதரன் - முதலாம் நரசிம்ம வர்மன்
63.
இராஜ சிம்மன் - இரண்டாம் நரசிம்ம வர்மன்
64.
கதாசாரம் எழுதியவர்- தண்டி
65.
அவந்தி சுந்தரி எழுதியவர்' தண்டி
66.
ஆகமப் பிரியன் - இரண்டாம் நரசிம்ம வர்மன்
67.
தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்- மூன்றாம் நந்தி வர்மன்
68.
காவிரி நாடன்,கடற்ப்படை அவனி நாரணன் - மூன்றாம் நந்தி வர்மன்
69.
கடைசிப் பல்லவ மன்னன்- அபராஜிதன்
70.
கீர்தார் சனியம் என்ற நூலை எழுதியவர்- பாரவி
71.
பாரத வெண்பா எழுதியவர்- பெருந்தேவனார்
72.
கல்லாடம் எழுதியவர்- கல்லாடனார்
73.
தங்கத்தின் எடை குறிக்கப்பட்டன- கழஞ்சு , மஞ்சாடி
74.
வணிகர் சங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது- மணி கிராமம்
75.
நிலங்களை அளக்கும் அளவுகள் - உளவு,ஹாலா,கலப்பை
76.
பல்லவ நிர்வாகத்தின் அடிப்படை அலகு- கிராமம்
77.
அமைச்சர்களுக்கு வழங்ககப்பட்ட பட்டங்கள்.- உத்தம சீலன்,பேரரையன்,பிரம்ம ராஜன்
78.
பல்லவ அரசின் உச்சநீதிமன்றம்- தர்மசேனா
79.
பல்லவ அரசின் வரிகள்- கானம்,இறை,பூச்சி பாட்டம்,
80.
கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்- தேவதானம்
81.
பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்- பிரம்மதேயம்
82.
மதுரை திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர்- வஜ்ஜிரனந்தி
83.
சித்திரக்கார புலி - முதலாம் மகேந்திர வர்மன்
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி குறிப்பிடும் பல்லவர்களது கல்வெட்டு - குடுமியான் மலை

இந்திய வரலாறு

வரலாற்றினை வரலாற்றுக் காலம், வரலாற்றுக் முந்திய காலம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பலங் கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக் காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 4 வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

  1. பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்)
  2. புதிய கற்காலம் (கி.மு. 10,000 - கி.மு. 4,000 வரை)
  3. செம்புக் காலம் (கி.மு. 3,000 - கி.மு. 1,500 வரை)
  4. இரும்புக் காலம் (கி.மு. 1,500 - கி.மு. 600 வரை)

ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரிக்கலாம். புதிய கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவற்றைப் புதைக்கும்போது, அவர்களுடன் பழகிய விலங்கு, பயன்படுத்திய பொருள்களை வைத்து புதைத்தனர்.



தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள்: திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி. - புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்.

செம்புக்காலம்:

புதிய கற்கால முடிவில் செம்பின் பயனை அறிந்திருந்தனர். செம்பினால் 0. கருவிகள் செய்தனர். எனவே அக்காலம் செம்புக் காலம் எனப்பட்டது. இக்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஒவியங்கள் காணப்படுகிறது. இவை வரிக்கோலங்களை வரையப்பட்டுள்ளன. இக்காலம் ஹரப்பா நாகரீக காலத்தை ஒத்தது.

இரும்புக் காலம்:

இரும்பினால் இக்காலத்தில் கருவிகள் செய்யப்பட்டன. வீட்டுச்சாமான்களும், பயிர்க் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன. உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்ய அறிந்திருந்தனர். வேதகால நாகரீகம் இக்காலத்தைச் சேர்ந்தது.



வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை அறிவியலின் துணைகொண்டு கணக்கிடப்படுகிறது. ரேடியோ கார்பன் முறையில் இவை கணக்கிடப்படுகின்றன. உயிர்சார் பொருள்களில் உள்ள கார்பனின் 14% வைத்து இது கணக்கிடப்படுகிறது. கார்பன் 14ன் அரை ஆயூட்காலம் 5568 ஆண்டுகள், டாக்டர் லிப்பி என்பவர் Radio Carbon Method கண்டறிந்தார்.

ஆங்கிலேய வைஸ்ராய்கள்

கானிங்பிரபு (1856 - 62):

  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல், பிரிட்டிஸ் இந்தியாவின் முதல் வைசிராய்
  • முதன்முதலில் வருமான வரியினை 1858 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.
  • 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சி நடந்த போது வைசிராயாக இருந்தவர் இவரே.
  • இவரை "கருணை உள்ள கானிங் என அழைத்தவர்கள் - ஐரோப்பியர்கள்

பெரும்புரட்சி (மே 10, 1857):

  • இப்புரட்சியை முதல் இந்தியப் விடுதலைப்போர் என்று கூறியவர் - சவார்க்கர்.
  • காரணங்கள் டல்ஹெளசி பிரபுவின் வாரிசு இழப்பு கொள்கை, வரிச்சுமை, செல்வச் சுரண்டல் சதி ஒழிப்பு (1829), விதவை மறுமண சட்டம் (1856), சமயச்சட்டம் (1856), இந்தியர்களுக்கு நிர்வாகத்தில் அமீன், இராணுவத்தில் சுபேதார் பதவிகள் மட்டுமே உயர்ந்த பதவியாக வழங்கப்பட்டது.
  • உடனடி காரணம் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த சிப்பாய்கள் மறுத்தல், புதிய என்பீல்டு ரக துப்பாக்கிகள் அறிமுகம்.
  • புரட்சியின் போக்கு புரட்சி தோன்ற காரணமாக இருந்தவர் - மங்கன் பாண்டே
  • முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம் - பேரக்பூர் (மார்ச் 29, 1857).
  • முதன் முதலாக புரட்சி பெரும்புரட்சியாக வெடித்த இடம் மீரட் (மே 10, 1857).
  • இப்புரட்சியின் போது இந்திய பேரரசர்” எனப் பிரகடனப்படுத்தப்பட்டவர் - இரண்டாம் பகதூர்ஷா . இப்புரட்சியின் போது மராத்திய பேஷ்வாக பிரகடனப்படுத்தபட்டவர் - நானாசாகிப்
  • இப்புரட்சியின்போது ஜான்சியின் அரசியாக பிரகடனப்படுத்தப்பட்டவர் -ராணிலட்சுமி பாய்
  • ஆங்கிலேயர்கள் பெரும்புரட்சியை அடக்கிய இடம் - டெல்லி (செப்டம்பர் 20, 1857)

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் விரிவாக்கம்

இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்

  1. 1857 - ஆங்கிலேயர்களால் சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் நடைபெற்றது
  2. 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது
  3. 1905 - வங்காள பிரிவினை, சுதேசி இயக்கம்
  4. 1909 - மின்டோ மார்லி சீர்திருத்தம்
  5. 1911 - தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது
  6. 1919- இந்திய அரசாங்கச் சட்டம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை
  7. 1920- கிலாபத் இயக்கம்
  8. 1922 - உத்திரபிரதேசத்தில் நடந்த சௌரி சௌரா சம்பவம்
  9. 1928- சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை, லாலா லஜபதிராய் மரணம்
  10. 1929 - லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் முழு சுதந்திரம் வேண்டும் என வலியுறுத்தல்
  11. 1930 - தண்டி யாத்திரை
  12. 1931- காந்தி இர்வின் ஒப்பந்தம், பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஸ்குரு தூக்கிலிடப்பட்டனர்
  13. 1935- இந்திய அரசாங்கச் சட்டம்
  14. 1943- கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
  15. 1946 - ஆங்கில அமைச்சரவை குழு இந்தியா வருகை

அரேபியர், துருக்கியர் படையெடுப்பு

இஸ்லாமிய மதத்தைத் தோற்றுவித்தவர் முகமது நபி (கி.பி. 570 - 632). அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் இதனை தோற்றுவித்தார். ஹிஜிரா சகாப்தம் - கி.பி. 622 முகமது நபி மெக்காவிலிருந்து மெதினா நகருக்கு சென்ற நிகழ்வை வைத்து கணக்கிடப்படுகிறது. அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை பரப்பவும், செல்வ வளம் கொழிக்கும் சிந்து பகுதியின் துறைமுகங்களை கைப்பற்றவும் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.

முகமது - பின் - காசிம் கி.பி.712 - முதல் இஸ்லாமியர் - இந்தியாவின் மீது படையெடுப்பு:

ஈராக் ஆளுநர் அல்ஹாஜாஜ் தனது மருமகன் முகமது பின் காசிமை சிந்துவின் மீது படையெடுக்க அனுப்பினார். சிந்துவின் மன்னர் தாகீருடன் போரிட்டு காசிம் வெற்றி பெற்றார். முல்தான் என்ற நகரை கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். முஸ்லீமாக அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது.

முகமது கஜினி:

  1. துருக்கியில் கஜினியின் அரசர் சபுக்டிஜினுக்கு பிறகு இஸ்மாயில் என்பவர் கஜினியின் அரசரானார். இவரின் சகோதரரான, முகம்மது கஜினி கி.பி. 998 ல் இஸ்மாயிலை அரச பதவியிலிருந்து நீக்கி, அப்பதவியில் அமர்ந்தார்.
  2. கி.பி. 1000-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார். இந்து அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்தார்.
  3. கி.பி. 1025ல் சோமநாதபுர படையெடுப்பின்போது ராஜாபீமதேவனிடன் வெற்றி பெற்று இருபது லட்சம் தினார்கள் மதிப்புள்ள விலயுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றார்.
  4. 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி ஒவ்வொரு முறையும் எண்ணற்ற பெருஞ்செல்வங்களை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றான்.

 

<<Back to Home