INDIAN HISTORY:நவீன இந்தியாவின் கல்வி மற்றும் கலாச்சார மையங்கள்.

 

நவீன இந்தியாவின் கல்வி மற்றும் கலாச்சார மையங்கள்

நவீன இந்தியாவின் கல்வி:

1.1813-ஆம் ஆண்டு பட்டய சட்டத்தில் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்ய வகை செய்தது.

 

2.பிரிட்டிஷ் காலத்தில் இந்திய கல்வியாளர்கள், கீழ்த்திசை வாதிகள் (Orientalists), ஆங்கிலவாதிகள் (Anglisists) என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர்

 

3.கீழ்திசைவாதிகள் இந்தியாவில் கீழ்த்திசை பாடங்கள் இந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் விரும்பினர்.

 

4.ஆங்கில வாதிகள் ஆங்கில மொழியில் மேலைநாட்டு அறிவியலும், இலக்கியமும் கற்பிக்கப்படவேண்டும் என்று  விரும்பினர்.

 

5.1929-ல் தலைமை ஆளுநராக பதவியேற்ற வில்லியம் பெண்டிங் இந்தியாவில் ஆங்கில மொழிக்கல்வி வேண்டுமென்று வலியுறுத்தினார்.

 

6.1835 மார்ச் 7-ஆம் நாள் வில்லியம் பெண்டிங்கின் சட்ட உறுப்பினரான மெக்காலே என்பவரை தலைமையாக கொண்ட குழுவின் தீர்மானத்தின்படி இந்தியாவில் மேல்நாட்டு அறிவியல் மற்றும் இலக்கியங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் "மெக்காலே திட்டம்" கொண்டுவரப்பட்டது.

 

7.1854-ஆம் ஆண்டு சார்லஸ் உட் என்பவரின் அறிக்கை ஐந்து மாகாணங்களில் கல்வித்துறை ஏற்படவும், சென்னை, கல்கத்தா மற்றும் பாம்பே நகரங்களில் பல்கலைக்கழகங்கள் ஏற்படவும் வழிவகை செய்தது.



8.1882-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவால் அமைக்கப்பட்ட "ஹண்டர் கமிஷன்" நகராட்சி பள்ளிகள் மற்றும் பள்ளிக்கூடங்களை நடத்துவதற்கு வழிவகை செய்தது.

 நவீன இந்தியாவில் தோன்றிய கலாச்சார மையங்கள்:

1.காசி இந்து பல்கலைக்கழகம் - மதன்மோகன் மாளவியா.

2.அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் - சர் சையது அகமது கான்.

3.விஸ்வபாரதி பல்கலைக்கழகம் - ரவீந்திரநாத் தாகூர்.

4.தக்காண கல்விக்கழகம் - M.g.ரானடே, அகர்கர்.

5.DAV பள்ளிகள் - மகாத்மா ஹன்ஸ்ராஜ் (லாலா லஜபதிராய் உதவியுடன்).

6.கலாஷேத்ரா - ருக்மணிதேவி அருண்டேல்.

7.பாரதிய வித்யாபவன் - K.M.முன்ஷி.

8.கலாமண்டலம் - வள்ளத்தோள் நாராயண மேனன்.

9.ஜமியா மிலியா இஸ்லாமிய - ஜாகிர் உசைன், ஹக்கீம் அஜ்மல்கான்.

10.ஆசியாட்டிக் சொசைட்டி - வில்லியம் ஜோன்ஸ்.

11.சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - இராமலிங்க அடிகள்.

 



 

No comments:

Post a Comment