INDIAN HISTORY: நிலையான நிலவரித்திட்டம், கிராம நிலத்தீர்வைத்திட்டம், ரயத்துவாரித்திட்டம் மற்றும் மகல்வாரி திட்டம்

 

 நிலையான நிலவரித்திட்டம், கிராம நிலத்தீர்வைத்திட்டம், ரயத்துவாரித்திட்டம் மற்றும் மகல்வாரி திட்டம்

நிலையான நிலவரித்திட்டம்:

1.நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவசூலிக்கும் முறையை கொண்டு வரும் நோக்குடன், ஆங்கில ஆளுநர்   எட்வர்ட் கிளைவ் காரன்வாலிஸ் பிரபுவின் நிலையான நிலவரித்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 

2.இந்த முறையில் வரி வசூலை நிர்ணயிக்கும் பொருட்டு அனைத்து நிலப்பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.

3.இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட நிலங்கள் மிட்டா என அழைக்கப்பட்டன. அந்த மிட்டாக்கள் மிட்டாதாரர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டன.

4.பாரமஹாலில் இந்த நிலையான நிலவரித்திட்டம் 1802-ல் கொண்டுவரப்பட்டது.

5.பாளையங்கள் ஜமீன்களாக மாற்றப்பட்டன. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வரிவசூலிப்பதில் குத்தகை முறையை பின்பற்றியது.

6.செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த நிலவரித்திட்டம் தோல்வியுற்றது.

 

கிராம நிலத்தீர்வைத்திட்டம்:

1.கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்பார்ப்புகளை நிலையான நிலவரித்திட்டம் பூர்த்தி செய்யவில்லை.

2.எனவே, கிராம நிலத்தீர்வை முறையை 1804 முதல் 1814-ஆம்  வரையிலான காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி நடைமுறைப்படுத்தியது.

3.இந்த முறை திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், தென் ஆற்காடு மற்றும் வடஆற்காடு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

ரயத்துவாரி திட்டம்:

1.வரிவசூலிக்கும் முறையை சீர்திருத்தம் செய்யும்பொருட்டு காரன்வாலிஸ் பிரபு அலெக்சாண்டர் ரீட், தாமஸ் மன்றோ ஆகிய இருவரையும் நியமனம் செய்தார்.

2.பலவிதமான நிலவரி கொள்கைகளை நன்கு ஆராய்ந்த மன்றோ (1820-1827) சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்.

3.பின்னர் சேலம், தஞ்சாவூர், மலபார், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

4.உழவர்கள் அரசாங்கத்திற்கு நேரடியாக வரி செலுத்தவேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்.

5.தமிழகத்தின் பெரும்பகுதி 1857-ஆம் ஆண்ட்டிற்குள் ரயத்துவாரி முறையின்கீழ் கொண்டுவரப்பட்டது.

 

மகல்வாரி முறைத்திட்டம்:

1.வில்லியம் பெண்டிங் பிரபுவினால் 1833-ஆம் ஆண்டு மகல்வாரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

2.இந்த முறையில் உழவர்களும், நில உரிமையாளர்களும் அரசாங்கத்திடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

3.ரயத்துவாரி முறையிலும், மகல்வாரி முறையிலும் உழவர்களின் நிலையில் எந்தவிதமான மாற்றமும் காணப்படவில்லை



No comments:

Post a Comment