INDIAN POLITY:PARLIMENT

 

இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்

   சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியின் செயல்பாட்டிற்கு ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது. சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை பதிலளிக்க கடமைப்பட்டவர்களாகவும், நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பொறுப்புடையவர்களாகச் செய்வதே நோக்கம் ஆகும். நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அந்நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பே, சட்டமன்றம் என பொதுவாக குறிப்பிடப்படுகின்றது.

   இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் ஈரவை(2-HOUSES) முறை:

நாடாளுமன்றம் ஈரவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை.

இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் சட்டமன்ற பேரவை (சட்டப்பேரவை) மற்றும் சட்டச்சபை என ஈரவை முறையே உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்ற பேரவையே உள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 29 மாநிலங்களுடனும், ஏழு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)

* ஒன்றியச் சட்டமன்றம்:நாடாளுமன்றம்

நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம். நாட்டினதும் அதன் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைபட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.

இரு முக்கிய அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

சட்ட அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம்
சட்ட அதிகாரங்கள் சட்டம் இயற்றுவதற்கானவை. நிதி அதிகாரங்கள் நிதிநிலை அறிக்கை என்று அறியப்படுகிற நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது. மேலும் இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.

* சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள்:

மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும். நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.

* மாநிலங்களவை:

மாநிலங்களவை என்று அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 238 உறுப்பினர்களையும் மற்றும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது. மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்றக் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூன்றாவது பிரிவினை மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த)சட்டம், 2003 திருத்தியது.
இதன் மூலம் மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது.
*
அவன்/அவள் இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வெளிப்படையான ஓட்டெடுப்பின் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்

  1. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் அல்லது

எந்த ஒரு குழுவிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.

·  ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை, கட்டுரை, வாக்குகள் அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எந்த நீதிமன்றத்திலும் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.

·  நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு நீதி மன்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

·  ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் உண்மையான எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்zகும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு, பிரசுரம் தவறான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு.

·  நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் உரிமையியல் வழக்குகளின் கீழ் ஒரு உறுப்பினரை கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம்.

·  நாடாளுமன்ற வளாகத்தினுள் ஒரு உறுப்பினருக்கு சட்ட நடவடிக்கை அறிக்கை அளிப்பது அல்லது கைது ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு

யார் மாநிலங்களவை உறுப்பினராகலாம்?
*இந்திய நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும்.
* 30
வயதுக்கு உட்பட்டவராக இருக்கக்கூடாது.
*
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் மாநிலங்களவைவுக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்கவேண்டும்.

 

No comments:

Post a Comment