INM-இந்திய தேசிய இயக்கம்

 

இந்திய தேசிய இயக்கம்:

1857 ஆம் ஆண்டு தோன்றிய பெரும் புரட்சியின் மூலம் உருவானது இந்திய தேசிய இயக்கம். இது மாபெரும் போராட்டமாக மாறி, இறுதியில் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தது.

இந்தியாவில் இந்திய தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் :

  1. ஆங்கில ஏகாதிபத்தியம் (அரசியல் ஒற்றுமை)
  2. ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு [ ஆங்கில மொழியும் மேலை நாட்டுக் கல்வியும் ]
  3. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
  4. அச்சகமும் செய்தித்தாளும்
  5. 19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்தங்கள்
  6. பிரிட்டீசாரின் பொருளாதாரச் சுரண்டல்
  7. 1857 ஆம் ஆண்டு புரட்சி
  8. இனப்பாகுபாடு
  9. லிட்டனது நிர்வாகம்
  10. இல்பர்ட் மசோதா சச்சரவு.

1. ஆங்கில ஏகாதிபத்தியம் (அரசியல் ஒற்றுமை)

  • இந்திய தேசிய இயக்கம் ஏற்பட ஆங்கில ஏகாதிபத்தியம் ஒரு முக்கியமான காரணமாகும்.
  • ஆங்கிலேயர் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததின் மூலம் ஒற்றுமையை நிலை நாட்டினர். இதனால் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கினர். இது தேசிய இயக்கம் மலர வழி வகுத்தது.

2. ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு [ ஆங்கில மொழியும் மேலை நாட்டுக் கல்வியும் ]

  • நாட்டில் தேசியம் வளர ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்து தலைமை தாங்கி நடத்திச் சென்றனர்.
  • மேலை நாட்டு கல்வி மூலம் சுதந்திம், சமத்துவம், விடுதலை, தேசியம், போன்ற மேலை நாட்டு கருத்துக்கள் இந்தியாவில் பரவி தேசியம் தோன்றலாயிற்று.
  • மேலும் படித்த இந்தியர்களின் மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
  • இந்தியர்கள் ஜெர்மனி, இத்தாலி, ஆகிய நாடுகள் ஐக்கியமடைந்ததைக் கண்டு ஊக்கமடைந்தன. எனவே தாங்களும் விடுதலை பெற எண்ணினர்.

3. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி:

  • ரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள், மற்றும் சாலைகள், கால்வாய்கள் மூலமாக போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்கள் இடையே தகவல் தொடர்பு எளிதாகியது.
  • இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர்.
  • மேலும், அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும் இது வழி வகுத்தது.

 

 

4. அச்சகமும் செய்தித்தாளும்

  • இந்தியன் மிர்ரர் என்ற பத்திரிக்கையும், பம்பாய் சமாச்சார், அமிர்த பஜார் பத்திரிகா , இந்து, கேசரி, மராத்தா போன்ற பத்திரிகைகள் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலித்தன.
  • 1878 - இல் கொண்டுவரப்பட்ட தாய்மொழிப் பத்திரிகை தடைச் சட்டம் , பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்தது. இது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை வலுப்பெறச் செய்தது.

5. 19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்தங்கள்

6. பிரிட்டீசாரின் பொருளாதாரச் சுரண்டல்

7.1857 ஆம் ஆண்டு புரட்சி

இக்கலகம் தேசியவாதம் மலர்வதற்கு காரணமாக அமைந்தது.

8. இனப்பாகுபாடு

  • 1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் , இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும் பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியது.
  • ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர். இதன்படி இன வேறுபாட்டுக் கொள்கையை கடைபிடித்தனர். இதனால் ஆங்கிலேயர் தங்களை உயர்வாகவும், இந்திய மக்களை தாழ்வாகவும் கருதினர்.
  • அனைத்து உயர் பதவிகளும் ஆங்கிலேயருக்கே வழங்கப்பட்டன.

9. லிட்டனது நிர்வாகம்

10. இல்பர்ட் மசோதா சச்சரவு

  • ரிப்பன் பிரபு காலத்தில் மத்திய சட்ட சபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும், இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இது திரும்ப பெறப்பட்டது.

இத்தகைய பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தேசிய இயக்கம் தோன்றியது.

ஆரம்பகால அரசியல் கலகங்கள் :-

  1. பிரிட்டிஷ் இந்திய கழகம் - 1851 [ வங்காளம்]
  2. பம்பாய் கழகம் - 1852 (தாதாபாய் நௌரோஜி ]
  3. கிழக்கு இந்திய கழகம் - 1856 [லண்டன்)
  4. சென்னை சுதேசி சங்கம் - 1852
  5. பூனா சர்வஜனச் சபை - 1870
  6. சென்னை மகாஜன சங்கம் - 1884.

இந்திய தேசிய காங்கிரஸ் :

  • ஆங்கில ஆட்சியில் நம்பிக்கை இழந்த இந்திய மக்கள், இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
  • 1885 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் கியூம் என்பவரின் ஆலோசனை பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
  • காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது [1885].W.C. பானர்ஜி தலைமை வகித்தார். இந்தியா முழுவதிலும் இருந்து 72 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • சமய , ஜாதி, மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இன்றி அனைத்து இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
  • காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது [1885]
  • காங்கிரசின் இரண்டாம் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது [ 1886]
  • காங்கிரசின் மூன்றாம் கூட்டம் சென்னையில் நடைபெற்றது [ 1887]

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை மூன்று முக்கிய நிலைகளாக அறிந்து கொள்ளலாம்.

  1. மிதவாதி தேசியம் [1885 - 1905]
    • இக்காலத்தில் காங்கிரஸ் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாகவே செயல்பட்டது.
  2. தீவிரவாதிகள் காலம் (Exteremist Period) - [1906 - 1916]
    • சுதேசி இயக்கம், தீவிரவாத தேசியம், தன்னாட்சி இயக்கம் போன்றவை நடைபெற்றன.

1. மிதவாதி தேசியம் [1885 - 1905]:

  • தேசிய இயக்கத்தின் தொடக்க காலமான இந்தக் கட்டத்தில் தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.. வாச்சா, ஆனந்த மோகன் போஸ், ராஷ்பிகாரி கோஷ், சுப்ரமணிய அய்யர் ஆகியோர் முக்கியமான மிதவாதி தேசியத்தின் தலைவர்கள்.
  • இவர்கள் படித்த, நடுவர்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே இவர்கள் மிதவாதிகள் எனப்பட்டனர்.
  • மிதவாதிகள் ஆங்கிலேயரின் நேர்மையான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • தங்கள் கோரிக்கைகளையும், வாதங்களையும் அமைதியான முறையில் கோரிக்கை மனுக்கள் மூலம் நிறைவேற்ற விரும்பினர்.
  • மிதவாதிகளின் கோரிக்கைகள் "அரசியல் பிச்சைபோல் உள்ளது எனக் காங்கிரசில் இருந்த இளைய தலைமுறையினர் வர்ணித்தனர்.
  • தொடக்க காலத்தில் ஆங்கில அரசு காங்கிரசுடன் நட்பு பாராட்டியது. அதன் பிறகு காங்கிரஸ் நிறைய சீர்திருத்தங்களை கேட்பதால் நட்பு ரத்தானது.

1. சுரேந்திரநாத் பானர்ஜி

  • சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியாவின் "பர்க்" என்று அழைக்கப்பட்டார்.
  • [சுரேந்திரநாத் பானர்ஜி - INDIAN CORPORATION - 1876]
  • சுரேந்திரநாத் பானர்ஜி வங்கப் பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
  • சுரேந்திரநாத் பானர்ஜி 1876 இல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக இந்திய கழகம் ஒன்றை தோற்றுவித்தார்.
  • சுரேந்திரநாத் பானர்ஜி நிறுவிய இந்திய தேசிய பேரவை [1883], பின்னர் 1886 இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.

ஜி.சுப்ரமணிய ஐயர் சென்னை மகாஜன சபை மூலம் தேசியத்தை பரப்பினார்.

தி இந்து, சுதேச மித்திரன் போன்ற பத்திரிக்கைகளையும் அவர் நிறுவினார்.

தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் முதும் பெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவிற்கான அதிகாரப் பூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் இவர் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் இவரே ஆவார்.

கோபால கிருஷ்ண கோகலே

காந்தியின் குருவாக கருதப்பட்டார். 1908 இல் கோபால கிருஷ்ண கோகலே இந்தியப் பணியாளர் கழகத்தை தோற்றுவித்தார். நாட்டிற்காக தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்தியப் பணியாளர் கழகத்தின் நோக்கமாகும்.

மிதவாதிகளின் வழிமுறைகள் :

பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர். உற்சாகத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் அவர்கள் இங்கிலாந்தை எதிர்நோக்கியிருந்தனர்.



கோரிக்கை மனுக்களை அழித்தல், தீர்மானங்கள் போடுதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர். படித்தவர்கள் மட்டுமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



அரசியல் உரிமைகளையும், தன்னாட்சியையும் படிப்படியாக அடைவதே அவர்களது குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை வரவேற்றது. 1886 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தலைமை ஆளுநர் டப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார்.



காங்கிரசின் கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கம் காங்கிரசுக்கு எதிராகத் திரும்பியது. முஸ்லிம்களை காங்கிரசில் இருந்து விலகி இருக்குமாறு ஊக்குவித்தது. இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட காங்கிரசின் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். அது 1892 - இந்திய கவுன்சில் சட்டம்.

 

மிதவாதிகளின் சாதனைகள் :

  1. மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை மிதவாதிகளால் உருவாக்க முடிந்தது.
  2. ஜனநாயகம், சிவில் உரிமைகள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் போன்ற சித்தாந்தங்களை அவர்கள் பிரபலப்படுத்தினர்.
  3. பிரிட்டிஷார் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டுகிறார்கள் என்று, மிதவாதிகள் மக்களுக்கு புரிய வைத்தனர்.
  4. தாதாபாய் நெளரோஜி எழுதிய "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் " என்ற நூலில் "செல்வ சுரண்டல் கோட்பாட்டைவிளக்கியிருக்கிறார்.
  5. இந்தியாவின் செல்வம் எந்தெந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டினார்.
  6. ஊதியங்கள், சேமிப்பு, ஓய்வூதியங்கள், இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கான செலவினங்கள், பிரிட்டிஷ் வணிக நிறுவனங்களின் லாபம் என்பவை அந்த பட்டியலில் அடங்கியிருந்தன.
  7. இதைப்பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் வெல்பி குழுவை நியமித்தது. அதில் முதல் இந்திய உறுப்பினராக தாதாபாய் நெளரோஜி நியமிக்கப்பட்டார்.
  8. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் வாயிலாக சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் மிதவாதிகளின் சாதனையாகும்.

இந்திய தேசிய இயக்கம் – II

இந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசிய வாதிகள் துணிச்சலான வழிமுறையை கையாண்டு வெற்றி பெற முடியும் என்று நம்பினர்.

  1. பால கங்காதர திலகர்
  2. லாலா லஜபதிராய்
  3. பிபின் சந்திரபால்
  4. அரவிந்த கோஷ் ஆகியோர் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானோர்.

தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் :

1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் மிதவாதிகள் பெறத் தவறினர்.



1896 - 1897 ஆம் ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும் , பிளேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர். நிற வெறி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.



1904 - 1905 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போரில், ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் வென்றது. இதனால் ஐரோப்பிய நாடான பிரிட்டனை இந்தியர்களாலும் வெல்ல முடியும் என ஊக்கம் பிறந்தது.



கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது. கர்சன் பிரபு கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை [1899] கொண்டு வந்து இந்தியரின் அதிகாரத்தை குறைத்தார்.



கர்சன் பிரபுவின் பல்கலைகழகங்கள் சட்டம் (1904], பல்கலைகழக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் எண்ணிக்கையை குறைத்தது. பல்கலைக்கழகங்கள் அரசின் துறைகளாக மாற்றப்பட்டன.



கர்சன் பிரபுவின் இராச துரோக குற்ற சட்டம், அதிகாரிகள் இரகசிய காப்புச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தது.கர்சன் பிரபுவின் மோசமான நடவடிக்கை வங்கப் பிரிவினையாகும்.[ 1905]

தீவிரவாதிகளின் முதன்மை குறிக்கோள் :

தீவிரவாதிகளின் தலையாய குறிக்கோள் "சுயராஜ்யம்" அல்லது "முழு விடுதலையே " தவிர வெறும் தன்னாட்சி அல்ல.

தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் :

  • அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணித்தனர்.
  • சுதேசிப் பொருள்களை ஆதரிப்பது. அந்நிய பொருட்களை வாங்க மறுப்பது.
  • தேசியக் கல்வியை அறிமுகப்படுத்தி வளர்ப்பது.

தீவிரவாதிகளின் தலைவர்கள் :

  1. பாலகங்காதர திலகர் (லோகமான்ய திலகர்)
  2. லாலா லஜபதிராய்
  3. பிபின் சந்திர பால்
  4. அரவிந்த கோஷ்

1. பாலகங்காதர திலகர் [ லோகமான்ய திலகர் ]

இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு முழுமையான இயக்கத்தை தோற்று வித்தவர் பால கங்காதர திலகர். இவரை லோகமான்ய திலகர் என்றும் அழைப்பர்.



திலகர் மராத்தியில் மராட்டா, கேசரி என்ற வார இதழ்களின் மூலமாக பிரிட்டாஷாரின் கொள்கையை சாடினார்.



திலகர் 1908 இல் ஆறு ஆண்டுகள் சிறைவாசத்திற்காக மாண்ட்லே கொண்டு செல்லப்பட்டார்.



திலகர் 1916 இல் பூனாவில் தன்னாட்சி கழகத்தை அமைத்தார்." சுயராஜ்யம் எனது பிறப்புரிமை , அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார். திலகர் கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் தூண்டினார்.

2. லாலா லஜபதிராய் :

லாலா லஜபதிராய் "பஞ்சாப்பின் சிங்கம் " என்று பலராலும் அறியப்பட்டவர். சுதேசி இயக்கத்தில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அமெரிக்காவில் 1916 இல் தன்னாட்சி கழகத்தை லாலா லஜபதிராய் தோற்றுவித்தார்.



லாலா லஜபதிராய் - மாண்ட்லே. சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்து 1928 நவம்பர் 17 இல் உயிர் நீத்தார்.

3. பிபின் சந்திர பால்:

பிபின் சந்திர பால் ஒரு மிதவாதியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தீவிரவாதியாக மாறியவர். சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டார்.



பிபின் சந்திர பால் தனது அனல் பறக்கும் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் தேசியத்தை நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்பினார்.

4. அரவிந்த கோஷ்:

அரவிந்த கோஷ் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அதற்காக சிறைபடுத்தப்பட்டு விடுதலையான பிறகு பிரெஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.

வங்கப் பிரிவினையும் தீவிரவாத எழுச்சியும் [ 1905]:

இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரவாதம் தோன்றுவதற்கு 1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை ஒரு தீப்பொறியாக அமைந்தது.

கர்சன் பிரபுவின் உண்மையான குறிக்கோள் :

இந்திய தேசியத்தின் அடித்தளமாக விளங்கிய வங்காளத்தில் வளர்ந்து வரும் தேசியத்தின் வலிமையை முறியடித்தல். வங்காளத்திலிருந்த இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வைப்பது.



தான் நினைத்ததை சாதித்து பிரிட்டிஷ் அரசின் வலிமையை வெளிப்படுத்துவது. 1905 அக்டோபர் 16 ஆம் நாள் வங்கப்பிரிவினை நடைமுறைக்கு வந்தது. [1905 அக்டோபர் 16 ஆம் நாள் - வங்காள துக்க தினம்]

இந்தியாவில் உண்மையான விழிப்புணர்வு வங்கப் பிரிவினைக்குப் பின்பு தான் தோன்றியது, என காந்தி எழுதினார். வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம் சுதேசி இயக்கமாக வலுப்பெற்று, இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவியது.



தீவிர தேசியவாதிகளின் செயல்பாடுகள், மிதவாதியான தாதாபாய் நெளரோஜியையே 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் குறித்து பேச வைத்தது. அந்த மாநாட்டில் சுதேசி அந்நிய பொருட்களுக்கு தடை குறித்த தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.



மிதவாதிகள் அரசியலமைப்பு ரீதியாகத்தான் சுயராஜ்யம் வெல்லப்பட வேண்டும் என்று கருதினர்.



இத்தகைய கருத்து மோதல்களால் தான் 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. இதுவே சூரத் பிளவு எனப்படுகிறது. திலகர் தலைமையில் தீவிரவாதிகள் மாநாட்டை விட்டு வெளியேறினர். [மிதவாதிகளின் தலைவர் கோகலே ]



1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை மேற்கொண்டார். ஆட்சியின் எளிமைக்கும், நிர்வாக வசதிக்கும் வங்காளத்தை

  1. கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம்,
  2. மேற்கு வங்காளம் மற்றும் பீகார்

என பிரித்து அறிவித்தார்.



தீவிர எதிர்ப்பினால் 1911 ஆம் ஆண்டு வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.வங்கப் பிரிவினை பொருளாதாரப் புறக்கணிப்பு என்னும் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாயிற்று.

சுதேசி இயக்கம் :

சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும். சுதேசி இயக்கத்தின் படி நாட்டின் தொழில்கள் மேம்பாடு அடைவதை ஊக்குவித்து, அயல்நாட்டு பொருள்கள் பயன்பாட்டை புறக்கணிப்பதாகும்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்ட "வந்தே மாதரம்" என்னும் தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை காங்கிரசார் எழுப்பினர்.

சுதேசி இயக்கம் பல்வேறு திட்டங்களை கொண்டதாகும். அவையாவன :

  1. அரசுப்பணி, நீதிமன்றங்கள், பள்ளிகள் ஆகியவற்றை புறக்கணித்தல்.
  2. அந்நிய பொருட்களை வாங்க மறுத்து சுதேசிப் பொருட்களை வாங்கி ஆதரித்தல்.
  3. தேசியப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிறுவி தேசிய கல்வியை வளர்த்தல்.

சுதேசி ஒரு அரசியல் பொருளாதார இயக்கம். சுதேசி இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது. வங்காளத்தில் பெரும் நிலச் சுவான்தார்களும் இதில் பங்கேற்றனர். மகளிரும், மாணவரும் மறியலில் ஈடுபட்டனர். அந்நிய காகிதத்தாலான கையேடுகளை மாணவர்கள் மறுத்தனர்.



சுதேசி இயக்கத்தினால் வந்தே மாதரம் முழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தீவிரவாத தலைவர்களான,
[1]
பாலகங்காதர திலகர்
[2]
லாலா லஜபதிராய்
[3]
அரவிந்த கோஷ் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீவிரவாதிகளின் சாதனைகள் :

சுயராஜ்யத்தை பிறப்புரிமையாக முதலில் கோரியவர்கள் தீவிரவாதிகளேயாவர். விடுதலை இயக்கத்தில் மக்களை பெருமளவில் ஈடுபடுத்தியது மற்றொரு சாதனையாகும்.

 

முதன் முதலில் அனைத்து இந்திய அரசியல் இயக்கத்தை (சுதேசி இயக்கம்] அமைத்து நடத்தியது போற்றத்தக்கதாகும்.

முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்படுதல்:

1906 டிசம்பரில் இந்தியா முழுவதிலும் இருந்த முஸ்லீம்கள், முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சார்ந்த நவாப் சலி முல்லா என்பவர் 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லிம் லீக்கை தோற்றுவித்தார்.

தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ - மார்லி சீர்திருத்தங்களின் போது முஸ்லீம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப் பெற்றது அவர்களது சாதனையாகும்.

முஸ்லீம் லீக்கின் நோக்கம் :

  • முஸ்லிம் உரிமைகளைப் பாதுகாப்பது.
  • காங்கிரசில் இருந்து முஸ்லீம்களை தனியாகப் பிரிப்பது.
  • ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக நடந்து, தனித் தொகுதி பெறுவது, ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டிருந்தது.

மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் :

முஸ்லீம்களை திருப்திபடுத்த , 1909 ஆம் ஆண்டு மிண்டோ - மார்லி சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.

முதல் உலகப்போர் 1914 - 1918 :

1914 இல் முதல் உலகப்போர் தோன்றியது. இப்போரில் பிரிட்டன் , பிரான்சு, இரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டன. ஆங்கிலேயரின் சார்பில் இந்தியர்கள் இப்போரில் தீவிரமாக பங்கேற்றனர். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு பொறுப்பாட்சி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு ஏற்பட்டது.

தன்னாட்சி இயக்கம் :

1916 ஆம் ஆண்டு இரண்டு தன்னாட்சி கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

  1. ஏப்ரல் மாதத்தில் பூனாவில் திலகர் தன்னாட்சி கழகத்தை தொடங்கினார்.
  2. செப்டம்பரில் அன்னிபெசன்ட் அம்மையார் சென்னையில் மற்றொரு தன்னாட்சி கழகத்தின் கிளையைத் தொடங்கினார்.

தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள் பிரிட்டிஷ் அரசுக்குள்ளேயே இந்தியாவுக்கு தன்னாட்சி பெறுவதாகும்.இந்தியாவின் வளங்கள் அதன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தன்னாட்சி இயக்கத் தலைவர்கள் கருதினர்.



அயர்லாந்தின் அன்னிபெசன்ட் அம்மையார் தம் பேச்சாலும், எழுத்தாலும் இந்திய மக்களிடையே மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். இதனால் அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய "நியூ இந்தியா " பத்திரிக்கையை ஆங்கில அரசு தடை செய்தது.



மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் தன்னாட்சி இயக்கத்திற்கு தங்கள் முழு ஆதரவைத் தந்தனர். இரண்டு தன்னாட்சி கழகங்களுமே தங்களுக்குள் கூட்டுறவு மனப்பான்மையோடு நடந்து கொண்டன. காங்கிரசுடனும், முஸ்லீம் லீக் உடனும் சேர்ந்து போராடின.



திலகரின் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிராவில் கவனத்தை செலுத்தியது. தன்னாட்சி இயக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது எனலாம். சுதேசி இயக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

 

லக்னோ ஒப்பந்தம் 1916 :

இந்திய தேசிய காங்கிரசின் ஆண்டு மாநாடு 1916 ஆம் ஆண்டு லக்னோ நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  1. பிரிந்த காங்கிரஸ் (மிதவாதிகள், தீவிரவாதிகள் ] ஒன்றிணைந்தது.
  2. காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் சுய ஆட்சி பெறுவதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

லக்னோ ஒப்பந்தம் 1916 -->> இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த மாநாட்டில் தான் ஜவஹர்லால் நேரு , காந்தியை முதன் முதலாக சந்தித்தார்.

ஆகஸ்ட் அறிக்கை 1917 :

1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் மாண்டேகு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிட்டது.



இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆகஸ்ட் அறிக்கை தன்னாட்சி இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

புரட்சிகர இயக்கங்கள் :

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின. மிதவாத, தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.



வங்காளத்தில் [1]. அனுசிலான் சமிதி [2]. ஜுகந்தர் ஆகிய ரகசிய இயக்கங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரத்தில் சவார்க்கர் சகோதரர்களால் "அபினவ் பாரத் சங்கம் "தோற்றுவிக்கப்பட்டது.



சென்னை மாகாணத்தில் நீலகண்ட பிரமச்சாரி "பாரத மாதா " சங்கத்தை தோற்றுவித்தார். பஞ்சாப்பில் இளைஞர்களிடையே புரட்சி கருத்துகளை பரப்புவதற்கு அஜித் சிங் ஒரு ரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். லண்டனிலிருந்த இந்திய ஹவுசில் சியாம்ஜி கிருஷ்ண வர்மா, இந்திய தேசிய வாதிகளான

  1. மதன்லால் திஸ்ரா
  2. சவார்க்கர்
  3. வி.வி.எஸ்.ஐயர்
  4. டி.எஸ்.எஸ். ராஜன் போன்றோரை ஒன்று திரட்டினார்.

அமெரிக்காவில் லாலா ஹர் தயாள் --> காதர் கட்சியை உருவாக்கினார். மேலும் இந்தியாவிற்கு வெளியே புரட்சியாளர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தார்.

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் : [ 1919]

முதல் உலகப்போரின் போது இந்தியர்கள் ஆங்கிலேயருக்கு முழு ஆதரவு கொடுத்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். இதற்கு மாறாக, 1919 ஆம் ஆண்டு ஆங்கிலப் பாராளுமன்றம் மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் படி,

  1. மத்திய மற்றும் மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
  2. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  3. ஆங்கிலோ - இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோருக்கு தனித்தனி தொகுதிகள் வழங்கப்பட்டன.

எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் இதனை நிராகரித்தது. இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும், அதனை ஏற்றுக்கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது எனவும் அன்னிபெசன்ட் விவரித்தார்.

இந்திய தேசிய இயக்கம் (காந்தி காலம் ][ 1917 - 1947]

இந்திய தேசிய இயக்கத்தின் மூன்றாம் நிலை [1917 - 1947] காந்தி காலம் எனப்படுகிறது. இந்த கால கட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார்.



தேசிய இயக்கத்தை காந்தி மக்கள் இயக்கமாக மாற்றினார். காந்தி 1869 அக்டோபர் 2 இல் பிறந்தார். இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். 1891 இல் இந்தியா திரும்பினார். 1893 இல் தென் ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கு நிலவிய இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் 20 ஆண்டுகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக 1915 இல் இந்தியாவிற்கு வந்தார்.



1917 இல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில் ஐரோப்பிய அவுரிச்செடி பண்ணையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு தான் காந்தி தனது "சத்யாகிரகம்" என்ற அறப்போர் முறையை முதன் முதலாக இந்திய மண்ணில் பரிசோதித்துப் பார்த்தார். 1918 இல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் மற்றொரு சத்யாகிரக போராட்டத்தை நடத்தினார். இப்போராட்டத்தின் போதுதான் சர்தார் வல்லபாய் படேல், காந்தியின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவராக எழுச்சி பெற்றார்.



1918 இல் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து சாகும் வரை உண்ணா விரதத்தை காந்தி மேற்கொண்டார். இவ்வாறாக

  1. சம்ப்ரான்,
  2. கேடா,
  3. அகமதாபாத்

போன்ற சிறிய அளவிலான போராட்டங்கள் தான் மகாத்மா காந்தியை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சென்றது.

ரௌலட் சட்டம் 1919 :

ஆங்கில அரசு, இந்திய சுதந்திர போராட்டத்தை தீவிரமாக எதிர் கொள்ள 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தது. ரௌலட் சட்டத்தின் படி, ஆங்கில அரசுக்கு எதிரான சதி வேலைகளை ஆய்வு செய்வதற்காக " சர் சிட்னி ரெளலட்" என்பவரது தலைமையில் 1917 இல் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி 1919 மார்ச்சு மாதம் ரௌலட் சட்டம் மத்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டது.

ரௌலட் சட்டத்தின் படி,
சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யலாம். இத்தகைய கைதுகளை எதிர்த்து விண்ணப்பமோ அல்லது மேல் முறையீடோ செய்ய முடியாது. ரெளலட் சட்டம் கருப்புச் சட்டம் என்று கருதப்பட்டது.

1919 ஏப்ரல் 6 ஆம் நாள் இந்தியா முழுவதிலும் ஹர்த்தால் ] மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லிக்கு அருகில் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களான டாக்டர் சத்திய பால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிச்லு இருவரும் அமிர்தசரசில் கைது செய்யப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 :

ரெளலட் சத்யாகிரகப் போராட்டத்துக்கு பஞ்சாபில் பெருத்த ஆதரவு திரண்டது. வன்முறையை எதிர்நோக்கிய பஞ்சாப் அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஜெனரல் டயர் தலைமையிலான ராணுவத்திடம் ஒப்படைத்தது.



ஏப்ரல் 13 ஆம் நாள் பைசாகி என்ற அறுவடைத் திருநாளன்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. டயர் அங்கு சென்று தனது படையுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.



துப்பாக்கிச்சூடு 10 முதல் 15 நிமிடங்கள் நீடித்தது. 379 பேர் கொல்லப்பட்டனர். 1137 பேர் படுகாயமடைந்தனர். ரவீந்திரநாத் தாகூர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து தனது "நைட்வுட்"பட்டத்தை துறந்தார். (ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்பு ரவீந்தரநாத் தாகூர் துறந்த பட்டம் - ans C) நைட்வுட் (2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற வி... தேர்வில் கேட்கப்பட்ட வினா)] ஜாலியன் வாலாபாக் படுகொலை விடுதலை இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை தந்தது.

கிலாபத் இயக்கம் 1919 :

முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும். செவரெஸ் உடன்படிக்கையும் ( 1920) முஸ்லீம்களுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது.



முதல் உலகப்போரில் ஜெர்மனியும் அதன் நட்பு நாடான துருக்கியும் தோல்வியடைந்தன. துருக்கி பேரரசு துண்டாக்கப்பட்டு பிரிட்டனும், பிரான்சும் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டன.



உலக முஸ்லிம் மக்களின் சமயத் தலைவரான "காலிப்" அவமதிக்கப்பட்டார். இதனை முஸ்லீம்கள் பெருத்த அவமானமாக எண்ணினார். எனவே ஆங்கில அரசுக்கு எதிராக இந்தியாவில் மெளலானா அபுல் கலாம் ஆசாத், எம்..அன்சாரி , சைபுதீன் கிச்லு, முகமது அலி, சவுகத் அலி என்ற அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கினார்கள்.



1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம். நவம்பர் 23 ஆம் நாள் இந்துக்களும், முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாடு கூடியது. நாட்டின் விடுதலைக்கு இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்று படுத்த வேண்டியதன் கட்டாயத்தை மகாத்மா காந்தி உணர்ந்திருந்தார்.



பின்னர், கிலாபத் இயக்கம் 1920 இல் மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒன்று கலந்தது. பால கங்காதர திலகர் 1920 ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து காந்தியடிகள் காங்கிரசின் தலைவரானார்.

 

ஒத்துழையாமை இயக்கம் [1920 - 1922]

ரெளலட் சட்டத்தை எதிர்த்தும், ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்தும், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தின் பயனின்மையை ஆங்கிலேயருக்கு உணர்த்தவும் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற நாக்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.



இதன் படி காங்கிரஸ் கட்சி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.

ஒத்துழையாமை இயக்கம் மூன்று நிலைகளில் கடைபிடிக்கப்பட்டது :

1.    

    • ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும் , விருதுகளையும் துறத்தல்.
    • 1919 ஆம் ஆண்டு சட்டப்படி நடைபெறவிருந்த தேர்தல்களை புறக்கணித்தல்.
    • அரசு விழாக்களை புறக்கணித்தல்.
    • தேசிய பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் போன்றவற்றை நிறுவுதல். காசி வித்யா பீடம், பீகார் வித்யா பீடம், ஜாமியா மிலியா போன்ற தேசிய கல்விக்கூடம் ஏற்படுத்தப்பட்டன.
    • தலைவர்களும், சமுதாயத்தில் செல்வாக்கு மிக்கவர்களும் தங்களது சிறப்புத் தகுதிகளையும், பட்டங்களையும் துறந்தனர்.

2.    

    • இரண்டாவது கட்டமாக வேலை நிறுத்தம் உட்பட பெரும் போராட்டங்களை நடத்தினர். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.
    • 1921இல் வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வந்த போது மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
  1. மூன்றாவது முக்கிய கடைசி கட்டமாக வரிகொடா இயக்கம். 1921 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரி செலுத்தக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரிகொடா இயக்கம் எனப்பட்டது.

செளரி செளரா சம்பவம் 1922 :

ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள், எத்தகைய வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



1922 பிப்ரவரி 5 ஆம் நாள் உத்திர பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள செளரி செளரா என்னுமிடத்தில் 1000 விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் போது காவலர்கள், விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.



இதனால் கோபமடைந்த விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக காவல் நிலையத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர். இதனைக் கண்டு வருத்தமடைந்த காந்தியடிகள் 1922 பிப்ரவரி 11 இல் ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலேயே கைவிட்டார்.1922 மார்ச்சு 10 ஆம் நாள் காந்தி கைது செய்யப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவம்

குடியானவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், போன்ற சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பங்கேற்ற முதலாவது மக்கள் இயக்கமாக இது திகழ்கிறது.



இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேசியம் பரவ இது [ ஒத்துழையாமை இயக்கம்] வழி வகுத்தது. கிலாபத் இயக்கமும் இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டதால், இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் உச்சகட்டமாக இது திகழ்ந்தது. இந்திய மக்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்குவார்கள் என்பதை ஒத்துழையாமை இயக்கம் எடுத்துக்காட்டியது.

சுயராஜ்யக் கட்சி [1923 - 1925]:

ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து 1922 டிசம்பரில் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் பிளவு ஏற்பட்டது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள்ளேயே 1923 ஜனவரி 1 ஆம் நாள் சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தனர்.



1923 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் சுயராஜ்யக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்பெற்றது. மத்திய சட்ட மன்றத்தில் மோதிலால் நேரு கட்சித்தலைவராகவும், வங்காள சட்ட மன்றத்தில் சி.ஆர்.தாஸ் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



சுயராஜ்யக் கட்சி அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக பல தீர்மானங்களைக் கொண்டு வந்தது. உள்துறைக்கான உறுப்பினர் அலெக்சாந்தர் முட்டிமான் இரட்டையாட்சி முறையை போற்றிப் புகழ்ந்த போது, மத்திய சட்ட சபையில் அதற்கு எதிரான தீர்மானத்தை சுயராஜ்யக் கட்சி கொண்டு வந்தது. 1925 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சி.ஆர்.தாஸ் இறந்ததால் சுயராஜ்யக் கட்சியும் கலைக்கப்பட்டது.

சைமன் தூதுக்குழு [1927 - 1928]

1919 ஆம் ஆண்டு சட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு , அதன் செயல்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று விதித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் மறு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் தலைவரான சர் ஜான் சைமன் என்பவரது பெயராலேயே "சைமன் குழு" என்று இது அழைக்கப்பட்டது.



சைமன் குழுவில் இடம் பெற்றிருந்த 7 பேர்களும் ஆங்கிலேயர்களாவர். இதில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இடம் பெறாமையால், இந்தியாவுக்கு வந்தடையும் முன்பே பலத்த எதிர்ப்புகள் தோன்றின.



1928 பிப்ரவரி 3 ஆம் நாள் இக்குழு பம்பாய் வந்திறங்கியபோது நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றன. சென்ற இடமெல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும்"சைமனே திரும்பிப் போ" என்ற முழக்கங்களும் இக்குழுவை அதிர வைத்தன.



1928 அக்டோபர் 30 ஆம் நாள் லாகூரில், லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தடியடியில் லாலா லஜபதி ராய் படுகாயமடைந்தார். ஒரு மாதம் கழித்து இறந்தார்.



பகத் சிங் உள்பட ஏராளமான கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். 1930 மே மாதம் சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இரட்டையாட்சியின் குறைபாடுகளை இது சுட்டிக்காட்டியது. அதற்கு பதில் மாநில சுய ஆட்சியை இக்குழு பரிந்துரைத்தது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திற்கு இக்குழுவின் அறிக்கை அடிப்படையாக விளங்கியது.

நேரு அறிக்கை 1928 :

இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் பிர்கன் ஹெட் பிரபு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமா என்று கேட்டு இந்தியர்களுக்கு சவால் விடுத்தார்.



இந்த சவாலை ஏற்ற காங்கிரஸ் 1928 பிப்ரவரி 28 இல் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியது. எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு 8 பேர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக மோதிலால் நேரு நியமிக்கப்பட்டார். இக்குழுவின் அறிக்கையே " நேரு அறிக்கை" எனப்பட்டது.

நேரு அறிக்கையின் சிறப்புக்கூறுகள் :

  1. நிலையான டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல். பால்
  2. மத்தியில் முழுப்பொறுப்பு வாய்ந்த அரசு.
  3. மாகாணங்களுக்கு சுயாட்சி.
  4. மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப்பிரிவு. மாகா6
  5. மத்தியில் 2 அவைகள் கொண்ட சட்ட மன்றம்.

முஸ்லீம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா, நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானது என்று கருதினார். அகில இந்திய முஸ்லிம் மாநாட்டை கூட்டிய ஜின்னா தனது 14 அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார்.

லாகூர் மாநாடு 1929:

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் மாநாடு லாகூரில், ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் " பூரண சுதந்திரம் பெறுவதே, இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம்" என அறிவிக்கப்பட்டது.



டிசம்பர் 31, 1929 ஆம் ஆண்டு நள்ளிரவில் "வந்தே மாதரம்" என்ற பாடலுக்கிடையே ராவி நதிக்கரையில் இந்திய மூவர்ண கோடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 26, 1930 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.



இதே நாளில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. எனவே ஜனவரி 26 ஆம் நாள் இன்றும் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

சட்ட மறுப்பு இயக்கம் (அல்லது) உப்பு சத்தியாகிரகம் 1930 - 1934 :

முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். பல லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரி விதித்தது. இதனை எதிர்த்து காந்தி மார்ச்சு 12 - 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரையை தொடங்கினார்.



காந்தியால் தேர்வு செய்யப்பட்ட சரோஜினி நாயுடு உள்பட 79 சீடர்களுடன் காந்தி அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பாதாயாத்திரை தொடங்கி சுமார் 400 கி.மீ. பயணம் மேற்கொண்டு 1930 ஏப்ரல் 5ஆம் நாள் குஜராத் கடற்கரை பகுதியிலுள்ள தண்டி வந்தடைந்தார். இது தண்டியாத்திரை (அல்லது) உப்பு சத்தியா கிரகம் என்று அழைக்கப்பட்டது.



தண்டியிலிருந்து ஏப்ரல் 6 ஆம் நாள், உப்புச் சட்டத்தை மீறியதாக காந்தி கைது செய்யப்பட்டார். உப்புச் சட்டங்களை மீறும் வகையில்

  • கிராமந்தோறும் உப்பு உற்பத்தி,
  • மதுக்கடைகள், அபினி மற்றும் அந்நியத் துணி விற்பனை நிலையங்கள் முன்பு பெண்கள் மறியலில் ஈடுபடுதல்,
  • ராட்டைகள் மூலம் துணி நெய்தல் போன்றவைகளை மக்கள் செய்தனர்.



அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டாம் என்று மக்களை காந்தி கேட்டு கொண்டார். விரைவில் இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள், தொழிலாளர்கள், குடியானவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டனர்.



தமிழ்நாட்டில் சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரை பகுதியில் வேதாரண்யத்தில் உப்பச் சட்டங்களை மீறி, உப்பு காய்ச்சினர்.

வட்ட மேசை நாடுகள் (1930 - 1932)

  1. முதல் வட்ட மேசை மாநாடு - 1930 நவம்பர்
  2. காந்தி - இர்வின் ஒப்பந்தம் - 1931 மார்ச்சு 8
  3. இரண்டாம் வட்ட மேசை மாநாடு - 1931 செப்டம்பர்
  4. வகுப்பு வாத அறிக்கையும், பூனா ஒப்பந்தமும் - 1932
  5. மூன்றாம் வட்ட மேசை மாநாடு - 1932

1. முதல் வட்ட மேசை மாநாடு - 1930 நவம்பர் :

சட்ட மறுப்பு இயக்கத்தை ஆங்கில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஆங்கில அரசு ஈடுபட்டது. இதனால் 1930 ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல் வட்ட மேசை மாநாட்டைக் கூட்டியது.



சட்ட மறுப்பு இயக்கம் இந்தியாவில் நடந்து கொண்டிருந்ததால், காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல் வட்ட மேசை மாநாடு தோல்வி அடைந்தது.

2. காந்தி - இர்வின் ஒப்பந்தம் - 1931 மார்ச்சு 8:

முதல் வட்ட மேசை மாநாடு தோல்வியில் முடிந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே பிரிட்டிஷ் அரசு இர்வின் பிரபுவை காந்தியை சந்திக்க இந்தியாவிற்கு அனுப்பியது.



காந்திக்கும் , இரவின் பிரபுவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் 1931 மார்ச்சு 8 ஆம் நாள் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் படி,

சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் , ஒப்பு கொண்டார். * இதற்கு கைமாறாக, ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்வதென்றும், உப்புச் சட்டங்களை திரும்ப பெருவதென்றும் ஒப்புக் கொண்டது.

3. இரண்டாம் வட்ட மேசை மாநாடு - 1931 செப்டம்பர் :

இரண்டாம் வட்ட மேசை மாநாடு - 1931 செப்டம்பரில் இலண்டனில் நடைபெற்றது. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் படி காந்தியடிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் இந்த மாநாட்டில் எட்டப்படவில்லை.



எனவே காந்தியடிகள் பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார். காந்திஜி, சர்தார் படேல் போன்ற தலைவர்கள் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. இதனால் 1932 ஜனவரியில் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.

4. வகுப்பு வாத அறிக்கையும் , பூனா ஒப்பந்தமும் - 1932:

1930 ஆம் ஆண்டு வாக்கில், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக போராடும் தேசிய அளவிலான தலைவராக உருவெடுத்தார். முதல் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த அம்பேத்கர், அவர்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.



1932 ஆகஸ்ட் 16 ஆம் நாள் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தனது, " வகுப்புக் கொடையை " [வகுப்புவாத அறிக்கை] அறிவித்தார். இதன் படி, தாழ்த்தப்பட்ட மக்கள் தனி வகுப்பினராக கருதப்பட்டு அவர்களுக்கு தனித்தொகுதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.



" வகுப்பு கொடையை " [வகுப்பு வாத அறிக்கை] எதிர்த்து மகாத்மா காந்தி 1932 செப்டம்பர் 20இல் எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினார். இறுதியில் டாக்டர் அம்பேத்கருக்கும், காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவே "பூனா ஒப்பந்தம் " எனப்படுகிறது. [ பூனா ஒப்பந்தம் - 1932]



* பூனா ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசும் ஏற்றுக்கொண்டது. பூனா ஒப்பந்தத்தின் படி, பல்வேறு மாகாண சட்ட மன்றங்களில் 148 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஒதுக்கீடு செய்தது. " வகுப்பு கொடையின் படி "71 இடங்களே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

5. மூன்றாம் வட்ட மேசை மாநாடு - 1932:

1932 ஆம் ஆண்டு மூன்றாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. இம்மாநாடு தோல்வியில் முடிந்தது. இருப்பினும், 1933 - மார்ச்சு மாதம் பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.



1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வெள்ளை அறிக்கையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் சைமன் குழுவின் அறிக்கை மற்றும், மூன்று வட்ட மேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அவையாவன :

  1. மாகாணங்களில் தன்னாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. மாகாணங்களில் செயல்பட்ட இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டது.
  3. மத்தியில் கூட்டாச்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.
  4. மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க கூட்டாச்சி நீதிமன்றம் நிறுவப்பட்டது.
  5. கூட்டாச்சி ரிசர்வ் வங்கி நிறுவப்படுதல் ஆகியனவாகும்.

இரண்டாம் உலகப்போரும் தேசிய இயக்கமும்

1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் படி, 1937 ஆம் ஆண்டு மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் வெற்றி பெற்று மந்திரி சபை அமைத்தது.



1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இந்நிலையில் ஆங்கில அரசு காங்கிரஸ் தலைவர்களைக் கலந்தோசிக்காமல், இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியது.



போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே தங்களது எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில் 1939 இல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவையை ராஜினாமா செய்தன.



காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்ததை , முஸ்லீம் லீக் கட்சி தலைவரான முகமது அலி ஜின்னா வரவேற்று உற்சாகமாக கொண்டாடினார். அவர் அந்நாளை 1939 செப்டம்பர் 22 விடுதலை நாளாக கொண்டாடினார்.



அதன் பின்னர் முகமது அலி ஜின்னா 1940 மார்ச்சு மாதம் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக இருக்க முடியாது, என்றும் அவர்களுக்கு தனித்தனியாக இருநாடுகள் தேவை என்றும் கோரிக்கை வைத்தார்.

பாகிஸ்தான் கோரிக்கை 1940:

முகமது அலி ஜின்னா 1940 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் தனது தனி நாடு கோரிக்கையை வெளியிட்டார்.

ஆகஸ்டு நன்கொடையும், தனி நபர் சத்யாகிரகம்1940 :

ஆங்கில அரசப் பிரதிநிதி லின்லித்கோ இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தினார். இதனை காங்கிரஸ் எதிர்த்தது. இதனால் காங்கிரசை திருப்தி அடையச் செய்ய சில உறுதி மொழிகளை லின்லித்கோ வழங்கினார்.



இதன் மூலம் போர் முடிந்ததும், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், அரசப் பிரதிநிதியின் நிர்வாகக் குழுவில் இந்தியருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.



இது ஆகஸ்டு நன்கொடை எனப்பட்டது. [1940 ஆகஸ்டு 8). ஆனால், காந்தி இதனை ஏற்க மறுத்து, தனிநபர் சத்யாகிரகத்தை தொடங்க முடிவு செய்தார்

தனிநபர் சத்யாகிரகம் 1940:

தனி நபர் சத்யா கிரகம் என்பது வன்முறையற்ற, குறைந்த அளவில் ஒரு அடையாளமாக நடத்தப்பட்ட இயக்கமாகும். சத்யா கிரகத்தில் ஈடுபட்டவர்களை காந்தியே தேர்வு செய்தார். முதலில் தனி நபர் சத்யா கிரகத்தில் ஈடுபட்டவர் ஆசார்யா வினோபா பாவே.



இவருக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்து ஜவஹர்லால் நேரு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு 4 மாதம் சிறை தண்டனை பெற்றார்.



தனி நபர் சத்யாகிரகம் 15 மாதங்கள் நீடித்தது.

கிரிப்ஸ் தூதுக்குழு 1942:

வைஸ்ராய் லின்லித்கொ பிரபு 1941 ஜூலையில், மேலும் 4 இந்தியர்களை தனது நிர்வாகிக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.



இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் இங்கிலாந்திற்கு எதிராக ஈடுபட்டது. இங்கிலாந்து போரில் வெற்றி பெற, இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது.



எனவே, காங்கிரசின் ஒத்துழைப்பை பெறவும், இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் 1942 மார்ச்சு 23 ஆம் நாள் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. கிரிப்ஸ் குழு இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு உதவிகரமாய் இந்தியா இருக்க வேண்டுமென அறிவித்தது.

கிரிப்ஸ் தூதுக்குழுவின் முக்கிய பரிந்துரைகள்

இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும். சிறுபான்மையினர் பாதுகாப்பு - சுதேச அரசுகள் மற்றும் பிரிட்டிஸ் இந்திய மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புக் குழு ஏற்படுத்தப்படும்.



பிரிட்டிஸ் இந்தியாவிலுள்ள எந்த மாகாணமாவது இந்த அரசியலமைப்பை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தற்போதைய நிலையில் தொடரவோ அல்லது தங்களுக்கென தனி அரசியலமைப்பை வரைந்து கொள்ளவோ அனுமதிக்கப்படும்.



ஆனால் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. கிரிப்சின் யோசனைகளை நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. காந்தி கிரிப்சின் யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை " என்று வர்ணித்தார்.

சுதேச அரசுகள் விரும்பினால் அரசியலமைப்பு குழுவிற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பலாம் அல்லது இந்திய ஒன்றியத்திலிருந்து விலகியே இருக்கலாம் என்ற யோசனையை அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை.



பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம் லீக் இதனை நிராகரித்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் [1942 - 1944]:

கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி, இந்தியா மீது ஜப்பான் படையெடுக்கும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும் இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார்.



பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் மட்டுமே ஓர் இடைகால அரசாங்கத்தை அமைக்க முடியும். இந்து - முஸ்லீம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று காந்தி கருதினார்.



1942 ஆகஸ்ட் 8 ஆம் நாளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடி புகழ் வாய்ந்த "வெள்ளையனே வெளியேறு" தீர்மானத்தை நிறைவேற்றியது.



காந்தி செய் அல்லது செத்து மடி என்று அறை கூவலை விடுத்தார். 1942 ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் காங்கிரசின் முக்கிய தலைவர்களை பிரிட்டிஷார் கைது செய்தனர்.



மகாத்மா காந்தி பூனா சிறையில் அடைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.



சரியான வழி காட்டுதல் இல்லாமல் , நாடெங்கும் வன்முறைக் கலவரங்கள் வெடித்தன. இத்தருணத்தில்

  1. ராம் மனோகர் லோஹியா
  2. அச்சுதன்.
  3. எஸ். எம். ஜோஷி
  4. ஜெய பிரகாஸ் நாராயண் போன்றோர் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினர்.



இளைஞர்கள் பலர் நாட்டுப்பற்றுடன் கலந்து கொண்டனர். கிராமப்புறங்களுக்கும் இந்த இயக்கம் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. 1943 இல் இந்த இயக்கம் மேலும் வலுவடைந்தது. வங்காளம், சென்னை போன்ற இடங்களில் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. 1944 இல் காந்தி சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டார்.



வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டமாகும்.



பிரிட்டிஷ் அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 538 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குறைந்தது 7000 பேர் கொல்லப்பட்டனர். 60229 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.



வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்திய விடுதலைக்கு நேரடியாக இட்டுச் சென்றது.

சுபாஸ் சந்திர போஸ் - இந்திய தேசிய ராணுவம் - 1942:

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் (நேதாஜி - தலைவர் ] புகழ் பெற்ற தேசத் தலைவர்களில் ஒருவராவார். சுபாஸ் சந்திர போஸ் 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். நேருவுடன் இணைந்து பணியாற்றினார்.



நேதாஜி இளைஞர்களும், பொதுமக்களும் தேசிய உணர்வு பெறக் காரணமாய் இருந்தார். 1938 ஆம் ஆண்டு நேதாஜி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 இல் நேதாஜி முற்போக்கு கட்சியினைத் தொடங்கினார்.



நேதாஜி சிறிது காலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். ஆப்கானியர் போல வேடமிட்டு, இந்தியாவிலிருந்து தப்பி ஜெர்மனியை அடைந்து, ஹிட்லரைச் சந்தித்து உதவி கோரினார். பின்னர் 1942 இல் பர்மாவிற்கு சென்றார். ஜப்பானியர்களால் பர்மா ஆக்கிரமிக்கப்பட்டது.



அச்சமயத்தில் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்த ஏராளமான இந்தியக் கைதிகளை ஜப்பான் கைப்பற்றியது. ஜப்பானிய அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து சுபாஸ் சந்திர போஸ் இந்தியர்களுக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.



1943 ஜூலை 2 ஆம் நாள் சுபாஸ் சந்திர போஸ் சிங்கப்பூரை சென்றடைந்தார். அங்கு இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை இராஸ் பிகாரி போஸ்,சுபாஸ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார்"ஆசாத் ஹிந்த் பவுஜ்" என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் தளபதியாக சுபாஸ் சந்திர போஸ் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து சுபாஸ் சந்திர போஸ் " நேதாஜி " என்றழைக்கப்பட்டார் [1943].



இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு தமிழ்நாட்டைச் சார்ந்த லட்சுமி என்ற பெண்ணின் தலைமையில் ஜான்சி ராணி பெயரில் அமைக்கப்பட்டது.



இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும், [1] சுபாஸ் பிரிவு, [2] காந்தி பிரிவு [3] நேரு பிரிவு என்று பெயரிடப்பட்டன. ஜெய்ஹிந்த், டெல்லி சலோ ---> சுபாஸ் சந்திர போஸ். கோஹிமாவில் வெற்றியைப் பெற்ற இந்திய தேசிய ராணுவம் இம்பாலை நோக்கி முன்னேறியது.



1945 இல் ஜப்பான் சரணடைந்த பிறகு அது தன் முயற்சிகளை கைவிட்டது. நேதாஜி தைவானுக்கு சென்றார். அங்கிருந்து டோக்கியோ செல்லும் வழியில் 1945 ஆகஸ்ட் 18 ஆம் நாள் விமான விபத்தில் இறந்து விட்டார் என நம்பப்படுகிறது.



டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. நேரு மற்றும் தேஜ் பகதூர் சாப்ரு அவர்கள் சார்பாக வாதிட்டனர். பார்வர்ட் பிளாக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் துவக்கப்பட்ட தினம் " - 1940, ஜூன் 22.

விடுதலையை நோக்கி

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி

  • 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர்.
  • சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் ஈடுபட்டனர்
  • சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை : சிம்லா மாநாடு
  • 1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
  • போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன.
  • எனினும் சிம்லா மாநாட்டில் காங்கிரசும் முஸ்லிம்லீக்கும் ஓர் ஒப்பந்தத்தை எட்டமுடியவில்லை.

காபினட் தூதுக்குழு (அல்லது ] அமைச்சரவை தூதுக்குழு 1946 :

இரண்டாம் உலகப்போருக்குப் பின், இங்கிலாந்து பிரதமராக அட்லி பிரபு பொறுப்பேற்றார். 1946 மார்ச்சு 15 ஆம் நாள் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் சுயநிர்ணய உரிமையை ஏற்றதுடன் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒப்புதலையும் வழங்கினார்.



[அட்லி அறிக்கை - 1946 மார்ச்சு 15]. பிரிட்டிஷ் அமைச்சரவையைச் சார்ந்த மூன்று பேர் [1] பெதிக் லாரன்ஸ் [2] சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் [3] .வி.அலெக்ஸாண்டர் கொண்ட குழுவை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார்.



இதுவே காபினட் தூதுக்குழு எனப்பட்டது. காபினட் தூதுக்குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது. இதன் படி மாகாணங்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி அரசியலமைப்புகளின் கீழ் இயங்கும்.



பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள், சுதேச அரசுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய ஒன்றியம் ஒன்றையும் அது முன் மொழிந்தது. இந்த ஒன்றியம், [1] அயலுறவுக் கொள்கை [2] பாதுகாப்பு [3] தகவல் தொடர்பு போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களை மாகாணங்கள் இடமே ஒப்படைக்க வேண்டும்.



புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் யோசனை கூறப்பட்டது. முஸ்லீம் லீக், காங்கிரஸ் இரண்டுமே இத்திட்டத்தை ஒப்புக் கொண்டன.



1946 ஜூலையில் அரசியலமைப்புக் குழுவிற்கான தேர்தல்கள் நடைபெற்றன. 214 பொதுத் தொகுதிகளில் 205 இல் காங்கிரஸ் வெற்றி. 78 தொகுதியில் 73 இல் முஸ்லீம் லீக் வெற்றி. 1946 செப்டம்பர் 2 ஆம் நாள் நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. [இடைக்கால அரசாங்கம் 1946 செப்டம்பர் 2]

மவுண்ட் பேட்டன் திட்டம் 1947 :

1947 பிப்ரவரி 20 ஆம் நாள் பிரதமர் அட்லி காமன்ஸ் அவையில் 1948 ஜூன் மாதத்திற்கு முன்பு இந்தியர்களிடம் ஆட்சி அதிகாரம் மாற்றப்படும் என்ற பிரிட்டிஷ் அரசின் திடமான எண்ணத்தை அறிவித்தார்.



இதனை நிறைவேற்றுவதற்கு மவுண்ட் பேட்டன் பிரபுவை இந்தியாவின் வைஸ்ராயாக அனுப்புவது என்றும் அவர் முடிவு செய்தார். 1947 மார்ச்சு 24 ஆம் நாள் மிகுந்த அதிகாரங்களுடன் மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக பதவியேற்றார்.



இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவது என்பது தவிர்க்க முடியாதது என்று மவுண்ட் பேட்டன் கருதினார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 1947 ஜூன் 3ஆம் நாள் இந்தியப் பிரிவினைக்கான தனது திட்டத்தை மவுண்ட் பேட்டன் அறிவித்தார்.



இது மவுண்ட் பேட்டன் திட்டம் (அல்லது) ஜூன் 3 ஆம் நாள் திட்டம் என்றழைக்கப்பட்டது. மவுண்ட் பேட்டன் திட்டம் 1947 (அல்லது 1 ஜூன் 3 ஆம் நாள் திட்டம் - இந்த திட்டத்தின் படி இந்தியா, இந்திய யூனியன் என்றும், பாகிஸ்தான் யூனியன் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்படும்.



இந்திய சுதேசி அரசுகள் இவ்விரு நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து கொள்ளவோ அல்லது சுதந்திரத்துடன் இருக்கவோ செய்யலாம், என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் ஏற்றுக்கொண்டன.

இந்திய விடுதலைச் சட்டம் 1947:

மவுண்ட் பேட்டன் திட்டத்தின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு 1947 ஜூலை 18 ஆம் நாள் இந்திய விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்திய விடுதலைச் சட்டம் 1947இன் முக்கிய கூறுகள் :

  1. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை 1947 ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும். பிரிட்டிஸ் அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் இவ்விரண்டு நாடுகளிடமும் வழங்கும்.
  2. புதிய நாடான பாகிஸ்தானில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளான,
    • மேற்கு பஞ்சாப்
    • சிந்து
    • வட மேற்கு எல்லைப்புற மாகாணம்
    • கிழக்கு வங்காளம்
    • அசாம் மாநிலத்திலுள்ள சில்ஹட் மாவட்டமும் இடம் பெற்றன. இந்தியாவில் மீதமுள்ள பகுதிகள் இடம் பெற்றன.
  3. பஞ்சாப், வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை வரையறுக்கும் ஆணையம் ஏற்படுத்தப்படும்.
  4. பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் அரசியலமைப்பு குழுக்களுக்கு அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும்.

ராட்கிளப் தலைமையிலான எல்லை வரையறுக்கும் ஆணையம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளை வரையறுத்தது.

1947 ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திரம்
1947
ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம்

1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் டெல்லி செங்கோட்டையில் ஆங்கிலக் கொடி (யூனியன் ஜாக்) இறக்கப்பட்டு, இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மவுண்ட் பேட்டன் பிரபு பொறுப்பு ஏற்றார். பின்னர் சி.இராஜகோபாலாச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநராக பதவி ஏற்றார். பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் - முகமது அலி ஜின்னா.



1948 ஜனவரி 30 காந்தியை அவர் வழிபாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் நாதூராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதனை நேரு " நம் வாழ்வில் ஒளி மறைந்தது எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" என்றார்

சுதேசி சமஸ்தானங்களின் இணைப்பு :

இந்திய அரசுகளை ஒன்றிணைத்தது சர்தார் வல்லபாய் படேலின் மாபெரும் சாதனையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாட்டில் ஏறத்தாழ 565 சுதேசி அரசுகள் இருந்தன. அவற்றை நவாப்புகள், அரசர்கள், மற்றும் நிஜாம்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த அரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பு சர்தார் வல்லபாய் படேலிடம் விடப்பட்டது.



562 சுதேசி அரசுகள் இந்திய யூனியனுடன் இணைந்தன. ஆனால் காஸ்மீர், ஐதராபாத், ஜூனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணையத் தயங்கின. பட்டேல் தனது அரசியல் திறமையாலும், கடுமையான நடவடிக்கைகளாலும், அந்தப் பகுதிகளை இந்திய யூனியனுடன் இணைத்தார். இதனால்"இந்தியாவின் பிஸ்மார்க் " என்றும் "இரும்பு மனிதர்" என்றும் போற்றப்பட்டார்.

 

 

 

 

பிரெஞ்சு பகுதிகள் இணைக்கப்படுதல் 1954 :

பிரெஞ்சு அரசின் அனுமதியுடன் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் 1954 ஆம் ஆண்டு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.

போர்ச்சுக்கீசியர்கள் பகுதிகள் இணைப்பு 1961:

கோவா, டையூ, டாமன் ஆகிய பகுதிகள் போர்ச்சுக்கீசியரின் வசமிருந்த பகுதிகளாகும். அப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். எனவே, இந்திய அரசு தனது ராணுவ நடவடிக்கைகளின் மூலம் 1961 ஆம் ஆண்டு அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது.

புதிய இந்தியா உருவாக்கம் :

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு டாக்டர். ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு தலைவர் àஅம்பேத்கர்.



1950 ஜனவரி 26 குடியரசு நாள். இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் à ஜனவரி 26, 1950.



இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் à இராஜேந்திர பிரசாத்.

 

No comments:

Post a Comment