பிறப்பு:
- ராஜாஜி என்றும் சி.ஆர் (C.R) என்றும் அழைக்கப்பட்டவரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அன்றைய சேலம் (தற்போதைய கிருஷ்ணகிரி) மாவட்டத்திலுள்ள தொரப்பள்ளி என்ற ஊரில் டிசம்பர் 10, 1878-ல் பிறந்தார்.
- இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் "சேலத்து மாம்பழம்" என பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.
இளமை காலம் மற்றும் அரசியல் பயணம்:
- சட்டக்கல்வி பயின்ற இவர். 1900-ஆம் சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். 1917 முதல் 1921 வரை சேலம் நகரசபை தலைவராக பணியாற்றினார்.
- தீவிர அரசியலில் 1921-முதல் ஈடுபட்ட இவர், காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்திற்கும், கிலாபத் இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.
- திருச்செங்கோட்டில் "காந்தி ஆசிரமம்" அமைத்து 1925 முதல் தீவிரமாக மதுவிலக்கு பிரச்சாரம் செய்தார்.
- தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சாத்தியகிரகம் 1930-ல் (திருச்சி முதல் வேதாரண்யம் வரை 240 கி.மீ) வேதாரண்யத்தில் நடைபெற்றது.
- இப்போராட்டத்தின் விளைவாக ராஜாஜி உட்பட பலர் கைதாகி ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
- சென்னை
மாகாண தேர்தலில் 1937-ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் சென்னை மாகாண முதலமைச்சராக ஜூலை 17-ல் பதவியேற்றார்.
- ராஜாஜி தமது ஆட்சியின்போது மதுவிலக்கு சட்டம், கைத்தொழில் பாதுகாப்பு சட்டம், ஆலய பிரவேச சட்டம், விற்பனை வரி அறிமுகம் (1937), ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக அறிமுகப்படுத்துதல்
(1938) போன்ற பல புதிய சட்டங்களை இயற்ற செய்தார்.
- பாகிஸ்தானின் தனி நாடு கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காததால் 1942-ல் காங்கிரஸ் இருந்து வெளியேறினார்.
C.R திட்டம் 1944:
- முஸ்லிமகளுக்கு தனி நாடு தருவதே நல்லது என்ற தமது C.R திட்டத்தை (C.R.Formula) 1944-ஆம் மீண்டும் காங்கிரஸில் இணைந்த ராஜாஜி காந்தியடிகளிடம் அளித்தார்.
- C.R அல்லது ராஜாஜி திட்டத்தின் குறிக்கோள் அகில இந்திய முஸ்லீம் லீக் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாடுகளை களைவது ஆகும்.
- இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய தேசிய காங்கிரஸின் கோரிக்கையை முஸ்லீம் லீக் ஆதரிக்கும் என்றும் சுதந்திரத்துக்கு பின் "பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் பொது வாக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்."
பதவிகள்:
- மேற்குவங்க ஆளுநராகவும் (1946 -
1947), சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாகவும் (1948, ஜூன் 21 முதல் 1950, ஜனவரி 25 வரை) பதவி வகித்தார்.
- இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக பதவி வகித்த ஒரே இந்தியர் இவர்தான். கடைசி கவர்னர் ஜெனெரல் இவரேதான்.
- சுதந்திரத்திற்கு பிறகு 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அதனால், தமிழக மேலவையில் உறுப்பினர் என்ற தகுதியுடன் ஏப்ரல் 10, 1952-ல் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார்.
குலக்கல்வி திட்டம் 1953:
- 1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது.
- ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
- 1953-இல் சென்னை மாநில முதல்வரான ராஜாஜி தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
- இக்கல்விமுறை ஜாதி அமைப்பை பலப்படுத்தும் "குலக் கல்வித் திட்டம்" என திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் எதிர்த்தன.
-
ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. சென்னையில் திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
- சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- திட்டம் கிடப்பில் போடப்பட்டு, "பருலேக்கர்" என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 1953 இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர்.
- ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 மார்ச் 25-இல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
- அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954 இல் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
சுதந்திர கட்சி :
- சுதந்திராக் கட்சி (Swatantra Party) ஆகத்து 1959-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் சோசலிசக் கொள்கைகளுக்கு எதிராக ராஜாஜி மற்றும் என்.ஜி.ரங்காவால் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.
- லைசன்சு ராஜ் என்றழைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கு எதிராக தனியார் தொழில்மயமாக்கலையும் மேற்கத்திய முதலீடுகளையும் வலியுறுத்தி வந்தது. 21 கொள்கைகளை விளக்கிய தேர்தல் அறிக்கை இந்த தாராளமய வணிக அடிப்படையில் அமைந்திருந்தது.
- ராஜஸ்தான், குஜராத், பீகார் மற்றும் ஒரிசாவில் வலிமை பெற்றிருந்தது. 1967-71 ஆண்டுகளிலிருந்த நான்காம் நாடாளுமன்றத்தில் 44 உறுப்பினர்களைக் கொண்டு தனிப்பெரும் எதிர்கட்சியாக விளங்கியது.
- இவர் தி.மு.க உடன் கூட்டணி வைத்து 1966-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
- 1972ஆம் ஆண்டில் ராஜாஜியின் மறைவிற்குப் பிறகு வேகமாக பலமிழக்கத் தொடங்கியது.
புத்தகங்கள் மற்றும் இறுதி காலம்:
- சாத்தியகிரக விஜயம் (மொழிபெயர்ப்பு), 'அந்நிய ஆட்சி வேண்டாம்', 'காந்தி வினா விடை', 'சக்ரவர்த்தி திருமகன்', 'வியாசர் விருந்து', 'திக்கற்ற பார்வதி' போன்ற பல நூல்களை எழுதிய ராஜாஜி டிசம்பர் 25, 1972-ஆம் ஆண்டு இயற்கை எழுதினார்.
- ராஜாஜியின் நினைவாக அஞ்சல் தலையானது டிசம்பர் 25, 1973-ஆம் ஆண்டு அவரது முதலாம் ஆண்டு நினைவுதினத்தில் வெளியிடப்பட்டது.
- (ராஜாஜி தேசிய பூங்கா 1983-ல் இவரின் நினைவாக உத்தரகாண்டில் டேராடூனில் (Dehradun) ஏற்படுத்தப்பட்டது. (Rajaji
National Park / Rajaji Tiger Reserve / rajaji wildlife sanctuary / rajaji
jungle castle).
<<Back to Home