ஒரு வாக்கிய வினாக்கள்

1 . அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை - ஞானசபை
2 . மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
3 . தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
4 . என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை - அன்புடைமை
5 . பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
6 . திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை - வீரமாமுனிவர்
7 . கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை - ரஷ்யா
8 . உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை - சென்னை
9 . பொருள் தருக – எய்யாமை .
விடை - வருந்தாமை
10 . அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - ஜெயவர்ஷினி
11 . உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை - 10
12 . இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை - திரிகடுகம்
13 . உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
14 . தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை - 9
15 . சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை - ஹிரோஷிமா
16 . திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை - திருநெல்வேலி
17 . திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
18 . டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை - கூடைப்பந்து
19 . இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
20 . ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - வீரமாமுனிவர்
21 . நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை - வாய்க்கால்
22 . பொருத்துக
இடுகுறிப்பொதுப்பெயர் - காடு
இடுகுறிச் சிறப்புப்பெயர் –பனை
காரணப்பொதுப்பெயர் – பறவை
காரணச்சிறப்புப்பெயர் –மரங்கொத்தி
23 . தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி
24 . ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை - பாரதியார்
25 . ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை - தெற்கே உள்ள திருவாரூர்
26 . ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்
27 . தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்
28 . திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை - 40
29 . நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , __ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை - 40
30 . பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை - 5
31 . ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை - வாணிதாசன்
32 . நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
33 . கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை - பெரம்பலூர்
34 . வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
35 . நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
36 . உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்
37 . கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்
38 . மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா
39 . நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை - வலிநீக்கி
40 . பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
41 . மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்
42 . பொருள் தருக – மடவார்
விடை - பெண்கள்
43 . பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை - கண்ணதாசன்
44 . ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை - புறநானூறு
45 . நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
46 . திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை - மருதகாசி
47 . ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்.

No comments:

Post a Comment