DAILY CURRENT AFFAIRS JULY-16-2021

 

July-16

தமிழ் செய்திகள்


  • மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்
    • உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை “செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்” Sembcorp Industries என்ற நிறுவனம் அமைத்துள்ளது.
    • 111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் “ட்ரோன்” ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
    • ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை 5 – 15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது.
      வானில் அரிய நிகழ்வு:-
      • சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அப்போது செவ்வாய், வெள்ளிகோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய்கோள்களுக்கு அருகே சந்திரன்தென்படும்.
      • பூடானில் பீம்-யுபிஐ பணப்பரி வர்த்தனை சேவை
        • பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சர்லியோன் போநாய்கேஷெரிங், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பிம்பணப்பரிவர்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினர்.
        • அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், கரோனா தொற்றால் பாதிப்புகள் நேர்ந்த போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பீம்-யுபிஐ சேவை பெரிதும் பயன்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அங்கமான யுபிஐக்யூஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 21-ஆம்ஆண்டுபீம்-யுபிஐ மூலம் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 220 கோடி பணப்பரி வர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment