ரோலர் கோஸ்டர் தினம் : 16 AUGEST 2021




சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் நம்மில் இதனை பேருக்கு தெரியும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 ஆம் நாள் தேசிய ரோலர் கோஸ்டர் தினம் (National roller coaster day) கொண்டாடப்பட்டு வருகிறது என்று. ஆம் ஆகஸ்ட் 16 தேசிய ரோலர் கோஸ்டர் தினம் (National rollercoaster day). இந்தநாளில் இத்தினத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பூங்காக்கள், தீம் பார்க்களில், மக்களில் மக்களை நீங்கள் அதிகம் காணலாம். 


ரோலர் கோஸ்டர் வரலாறு 

Ricard kndsen மற்றும் J.G Taylor 1878 ஒரு மர ரோலர் கோஸ்டர் என குறிப்பிட்ட சாதனத்திற்கு U.S காப்புரிமை பெற்றார். இது நான்கு பயணிகளை காரில் ஏற்றி செல்லும் வகையிலும் இரண்டு கோபுரங்களுக்கு நடுவில் செல்லும் இரண்டு அருகருகே அமைந்த ரயில் பாதைகளை கொண்டுள்ளது. புவிஈர்ப்பு விசை மெதுவாக கார்களை சாய்வான மலைகளின் கீழே இழுக்கும். பின்னர் திரும்பவும் பயணத்திற்காக வெவ்வேறு கோபுரத்தில் உள்ள லிப்ட் (lift) மூலம் கார்கள் இழுத்து செல்லப்படும். Ricard kndsen மற்றும் J.G Taylor தாங்கள் உருவாகிய சாதனத்திற்கு ஆகஸ்ட் 16 ஆம் நாள். U.S காப்புரிமை பெற்றனர். எனவே இன்றளவும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 national rollercoaster day கொண்டாடப்பட்டு வருகிறது. 


இதன் பிறகு பல வருடங்கள் கழித்து, Lamarcus A. Thompson தொழில்முனைவோர் 1884 ஆம் ஆண்டு நியூயார்க்கின் கோனி தீவில் "Switchback railway "என்ற சாதனத்தை உருவாக்கினார். ரோலர் கோஸ்டரை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பதை இவர் நன்றாக அறிந்திருந்தார். இவரை ஈர்ப்பு சவாரிகளின் தந்தை என்றும் அழைப்பதுண்டு. இவர் தன் வாழ்நாளில் ரோலர் கோஸ்டார்க்கு சம்பந்தப்பட்ட 30 க்கும் மேற்பட்ட காப்புரிமையை பெற்றிருந்தார். 


எவ்வாறு இந்த நாளை கொண்டாடுவது 


உங்கள் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று உங்கள் நண்பர்களுடன் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் செய்து இந்த நாளை நீங்கள் கொண்டாடலாம். மற்றும், அங்கு புகைப்படம் எடுத்து அதனை #nationalrollercoasterday என்ற ஹாஸ்டாகில் பதிவிடலாம். 

No comments:

Post a Comment