DAILY CURRENT AFFAIRS:09-AUGUST -2021

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9

💥 1945, ஆகஸ்டு 9-ம் நாள் ஹிரோஷிமாவிற்கு அடுத்தபடியாக ஜப்பானில் உள்ள நாகசாகியின் மீது அமெரிக்கா இரண்டாவது அணுகுண்டினை வீசியது.

💥 ஜப்பானின் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முக்கிய இடமாக திகழ்ந்த காரணத்தால் நாகசாகியின் மீது குண்டு வீச அமெரிக்கா திட்டமிட்டது.

💥 இந்நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் "ஃபேட்மேன் (Fatman)" ஆகும்.

💥 Fatman என்பது புளூட்டோனியம் வெடிகுண்டு(Plutonium bomb) ஆகும்.

💥 இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட 10,000 பவுண்டுகள் எடை கொண்டது.

💥 இது, நாகசாகி நகரத்திற்கு மேலே 1650 அடி உயரத்தில் B29 அமெரிக்க விமானத்தின் மூலம், காலை 11.02 மணியளவில் வீசப்பட்டது.

💥 இந்த அணு ஆயுத தாக்குதல் மூலம்,நாகசாகியில் 70,000-த்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

💥 ஜப்பான் நகரத்தில் ஏற்பட்ட இந்த அழிவு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைய வழிவகுத்தது.

💥இன்று நிதிநிலை குறித்து நிதிநிலை அறிக்கை

💥வரும் 24 முதல் செப்டம்பர் 5 வரை பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற உள்ளது.

💥இ. பி. எஸ். கணக்குடன் ஆதார் எண் இணைக்க செப்டம்பர் 01 கடைசி நாள்.

💥கோரோனோ தடுப்பூசி போட்டுகொண்ட சான்றிதழை வாட்ஸ் அப்பில் பேறும் வசதி அறிமுகம்
வாட்ஸ் அப் எண்:9013151515.

💥தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மரணம் அடைந்தார்.





No comments:

Post a Comment