SEPTEMBER 04:2021-DAILY CURRENT AFFAIRS

நடப்பு நிகழ்வுகள்– 04 செப்டம்பர், 2020



தேசிய செய்திகள்

ஜல் சக்தி அமைச்சகம் ‘Water Heroes Contest 2.0’ என்ற போட்டியை ஐ அறிமுகப்படுத்தி உள்ளது

ஜல் சக்தி அமைச்சகம்  சமீபத்தில் “Water Heroes – Share Your Stories” என்ற போட்டியைத் தொடங்கியுள்ளது, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சியை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

  • இதில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ரூ .10,000 ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
மாநில செய்திகள்

கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாங் லாப்சோல் திருவிழா சிக்கிமில் கொண்டாடப்பட்டது

சிக்கிமில் பாங் லாப்சோல் திருவிழா கொண்டாடப்பட்டது. சிக்கிமில் கொண்டாடப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று பாங் லாப்சோல்.

  • சிக்கிமின் இந்த தனித்துவமான திருவிழா ஆண்டுதோறும் திபெத்திய நாட்காட்டியின் ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆகஸ்ட் பிற்பகுதியிலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ கொண்டாடப்படுகிறது.

ஜம்மு & காஷ்மீர்  அரசு பல்லுயிர் பேரவையை (Biodiversity Council) அமைக்க உள்ளது

ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் யூனியன் பிரதேசத்தின் பல்லுயிர் தன்மையை ஆவணப்படுத்த 10 உறுப்பினர்களைக் கொண்ட பல்லுயிர் சபையை அமைத்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் உதவியுடன் மக்கள் பல்லுயிர் பதிவேட்டை (PBR) இந்த கவுன்சில் பராமரிக்கும்.

  • பொது நிர்வாகத் துறை (GAD) பிறப்பித்த உத்தரவின்படி, இந்த பல்லுயிர் சபை தேசிய பல்லுயிர் ஆணையத்துடன் கலந்தாலோசித்து செயல்படும்.

தரவரிசைகள்

உலக பல்கலைக்கழக தரவரிசை 2021 இல், 63 இந்திய நிறுவனங்களில் IISC பெங்களூரு முதலிடம்

THE (Times Higher Education) வெளியிட்ட உலக பல்கலைக்கழக தரவரிசை 2021 ஐ வெளியிட்டுள்ளது. 301-350 தரவரிசைகளின் கீழ், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) பெங்களூரு தரவரிசைக்கு தகுதிபெற்ற 63 நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.

  • ஐ.ஐ.எஸ்.சி.யைத் தொடர்ந்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ரோப்பர் மற்றும் ஐ.ஐ.டி இந்தூர் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைத் தக்கவைத்துள்ளன.
நியமனங்கள்

முரளி ராமகிருஷ்ணன் சவுத் இந்திய வங்கியின் (SIB) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்

கேரளாவை தலைமை இடமாக கொண்ட சவுத் இந்தியா வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் முரளி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்பார். அவர் ஐசிஐசிஐ வங்கியில் திட்டக் குழுவில் மூத்த பொது மேலாளராக 2020 மே 30 அன்று ஓய்வு பெற்றார்

  • அக்டோபர் 1, 2020 முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு இவரை நியமனம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

எஸ் கிருஷ்ணன் பஞ்சாப் & சிந்து வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

எஸ்.கிருஷ்ணன் பஞ்சாப் & சிந்து வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  எஸ்.ஹரிஷங்கர் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்த நியமனத்திற்கு முன்பு,கிருஷ்ணன் அரசுக்கு சொந்தமான வங்கியான கனரா வங்கியில் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வி கே யாதவை நியமிக்கப்பட்டுள்ளார்

ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவர் வி.கே.யாதவ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

  • இந்த நியமனத்தோடு இந்திய ரயில்வே மருத்துவ சேவை (IRMS) இந்திய ரயில்வே சுகாதார சேவை (IRHS) என மறுபெயரிடப்பட உள்ளது.
மாநாடுகள்

SCO கவுன்சில் உச்சி மாநாட்டை இந்தியா நவம்பர் 30 ஆம் தேதி நடத்த உள்ளது

நவம்பர் 30, 2020 அன்று இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.

  • 2005 ஆம் ஆண்டு வரை இந்தியா எஸ்சிஓவின் பார்வையாளராக இருந்தது. இது பாகிஸ்தானுடன் சேர்ந்து 2017 இல் உறுப்பினரானது.
  • மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்த எஸ்சிஓ ஒரு நல்ல தளமாக செயல்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
பாதுகாப்பு செய்திகள்

இந்தியா-ரஷ்யா ஏ.கே.-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் , இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து ஏ.கே .47 203 துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஏ.கே -47 203 என்பது ஏ.கே.-47 ரக துப்பாக்கியின் மேம்பட்ட பதிப்பாகும்.

  • ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்தில் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு துப்பாக்கியின் விலை சுமார் 1,100 டாலர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையில்  சீன கடற்படை உலகின் மிகப்பெரிய  கடற்படையாக முதலிடம் பிடித்துள்ளது

அமெரிக்கா சமீபத்தில் இராணுவ சக்தி குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, சீன கடற்படை இப்போது உலகின் மிகப்பெரியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சீனாவின் சுமார் 350 போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தற்போது வைத்துள்ளது. இதற்கு அடுத்து அமெரிக்க கடற்படை சுமார் 293 கப்பல்களைக் கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்

இந்திய கிராண்ட்மாஸ்டர் பி இனியன் உலக ஓபன் ஆன்லைன் செஸ் போட்டியில் வெற்றியைப் பெற்றார்

இந்திய கிராண்ட்மாஸ்டர் பி இனியன் மதிப்புமிக்க 48 வது ஆண்டு உலக ஓபன் ஆன்லைன் செஸ் போட்டியில் வென்றுள்ளார். ஆறு வெற்றிகளையும், மூன்று டிராக்களையும் பெற்று 9 புள்ளிகளில் 7.5 புள்ளிகளைப் பெற்றார்.

  • இனியன் ஜார்ஜியாவின் கிராண்ட்மாஸ்டர்ஸ் பாதூர் ஜோபாவா, சாம் செவியன், அமெரிக்காவின் செர்ஜி எரன்பர்க் மற்றும் உக்ரைனின் நிஜிக் இல்லியா ஆகியோரை தோற்கடித்தார்.
புத்தகங்கள் & ஆசிரியர்கள்

போப் பிரான்சிஸ் “Let Us Dream” என்ற புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்

போப் பிரான்சிஸ் 2020 டிசம்பரில் “Let Us Dream” என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். இந்த புத்தகத்தில், போப் பிரான்சிஸ் ஒரு நெருக்கடி ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள முடியும் என்பதை விளக்குகிறார்.

பிற செய்திகள்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டேவிட் கேபல் காலமானார்

1987-1990 வரை இங்கிலாந்துக்காக 15 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டேவிட் கேபல் காலமானார்.

  • இவர் ஓய்வு பெற்றதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
  • 2013 இல் இங்கிலாந்து மகளிர் அணியின் உதவி பயிற்சியாளராகவும், 2016 முதல் 2018 வரை பங்களாதேஷ் மகளிர் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

No comments:

Post a Comment