காந்தி ஜெயந்தி சிறப்பு: அக்டோபர்-02


காந்தி ஜெயந்தி சிறப்பு: மாணவர்கள் கற்க வேண்டிய மகாத்மா!



நமது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நமது இந்தியாவின் 'தேசத் தந்தை' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி 'காந்தி ஜெயந்தி' தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, அனைத்து மதத்தினரும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகவும், முக்கிய தினமாகவும் கருதப்படுகிறது.

காந்தி ஜெயந்தி சிறப்பு: மாணவர்கள் கற்க வேண்டிய மகாத்மா!  

இது ஓர் விடுமுறை நாளாக மட்டுமின்றி மாணவர்கள் மத்தியில் மகாத்மாவைக் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் கட்டாயம்.

இது ஓர் விடுமுறை நாளாக மட்டுமின்றி மாணவர்கள் மத்தியில் மகாத்மாவைக் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் கட்டாயம்.

அகிம்சை ஆசான்


இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்பவர் காந்தி. அகிம்சை மற்றும் சத்யாகிரக வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றவர். இன்றும் காந்தி என்ற ஒற்றைச் சொற்கள் நமக்கு விளக்கும் பாடம் அகிம்சை மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார்

வளர்ச்சியில் காந்தி


ஆலைப் புரட்சிக்காக பறக்காமல், கிராமப்புற வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்பதன் அடையாளம்தாம் காந்தி மேற்கொண்ட இராட்டையும், கதரும் மீதான அக்கறை.

சுயசிந்தனைகளை விதை


போலிகளை ஓர் இனமாக உருவாக்கும் நாடு தேசியமாக முடியாது என்றவர் காந்தி. ஆங்கிலேயக் கல்வி முறை மிகச் சரியாக இதைத்தான் செய்வதாக காந்தி தெரிவித்தார். மண்ணிலிருந்து அந்நியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிமையாட்களை உருவாக்கி அளிக்கும் கல்விமுறை என்றார். பாடப் புத்தகங்கள் மூலமாக மட்டும் அனைத்தையும் கற்பித்துவிடலாம் என்றால் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை. பாடப் புத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுய சிந்தனையை விதைக்க முடியாது என அன்றே தெளிவுபடுத்தினார்.


பெற்றோர்களுக்காக..!


ஒரு சிறந்த கல்வி என்பது குழந்தை அல்லது மனிதனின் உடல், மனம் உட்பட அனைத்துத் தளங்களிலும் அவர்களிடையே உறைந்து, மறைந்துள்ள ஆகச் சிறந்த பண்புகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது காந்தியின் கருத்து. அதனைப் பெற்றோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

தாய்மொழியில் கல்வி

பள்ளி என்பது ஓர் வீட்டுச் சூழலாகவே இருக்க வேண்டும். பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம் வேண்டும் என்றார். வேற்று மொழிகளில் கல்வி மேற்கொள்ளும் போது இந்த ஒத்திசைவு மாறுபடுகிறது. சிதைபடுகிறது. இப்படிச் சிதைவுகளை மேற்கொள்பவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும் கூட, அவர்கள் மக்களின் எதிரிகளே என்று தாய்மொழி வழிக் கல்வியின் தேவையை அன்றே பதிந்தவர் காந்தி.

காந்தி வலியுறுத்திய கல்வி

கைத்தொழில், பயிற்சிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பெறும் புத்தகங்களும், பாடங்களும் முழுமையான கல்வியாகாது.



கல்வி அகிம்சையை, பொதுவுடைமையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையைப் போதிப்பதாக இருக்க வேண்டும்.


ஒரு குழந்தையின் தாய்மொழிக் கல்வியே சிறந்ததாக இருக்க முடியும். மாற்று மொழியிலான பாடம் கல்வியாக இருக்காது. திணிப்பாகவே இருக்கும்.

 


கல்வி என்பது சுயமரியாதையினை, ஆளுமை வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்.


கல்விமுறை கிராமப்புற மக்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். பாடங்களும் அதனை மையமாகக் கொண்டே இருக்க வேண்டும். மேல்தட்டு மக்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது.

மாறவேண்டிய மனநிலை

இன்றைய இளைஞர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கூட காந்தி ஜெயந்தி ஓர் விடுமுறை நாளாக மட்டுமே அடையாளப்படுத்துகின்றனர். இவ்வாறான மனநிலையை மாற்றி காந்தியின் கொள்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் மக்கள் அனைவருக்குமே உண்டு என்பதை இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும். அவர் மீதான மாற்றுக் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு தற்போதைய சமுதாயத்திற்கு ஏற்ற அவரது கூற்றுக்களை நடைமுறைப்படுத்துவோம்

 

No comments:

Post a Comment