இராமலிங்க அடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 5

  இராமலிங்க அடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 5




❇️ இராமலிங்க அடிகள்:


💠 இவர் பிறந்த ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள “மருதூர்”


💠 இவரது பெற்றோர் இராமையாப் பிள்ளை – சின்னம்மாள்.


💠 இவரது காலம்10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.


💠 இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு “திருவருட்பா” என்று அழைக்கப்படுகிறது.


💠 இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.


💠 திருவருட்பா = திரு + அருட்பா என்று பிரிக்கலாம். 


💠 இதற்கு தெய்வீக அருளால் பாடப் பெற்ற பாக்கள்” என்பது பொருள்.


💠 திருவருட்பா முதலில் இராமலிங்க அடிகளின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறையாக வெளியிடப்பட்டது.


💠 பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளிப்பட்டன.


💠 முன்னாள் தமிழக அறநிலையத் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியனவற்றை தனிநூலாகத் தொகுத்து வெளியிட்டார்.


💠 இராமலிங்கர் தனது உடன்பிறந்த உண்ணாமுலை மகள் தனக்கோடியை தனது இருபத்தேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.


❇️ இராமலிங்க அடிகள் கொள்கை


☘️ கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.


☘️ புலால் உணவு உண்ணக் கூடாது.


☘️ எந்த உயிரையும் கொல்லக்கூடாது.


☘️ சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.


☘️ இறந்தவர்களை எரிக்க கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்.


☘️ எதிலும் பொது நோக்கம் வேண்டும்.


☘️ பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.


☘️ சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.


☘️ எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே அவற்றை துன்புறுத்தக் கூடாது.


❇️ வள்ளலார் பதிப்பித்தவை


1️⃣ சின்மய தீபிகை


2️⃣ ஒழி விலொடுக்கம்


3️⃣ தொண்டமண்டல சதகம்


❇️ இயற்றிய உரைநடை


1️⃣ மனுமுறை கண்ட வாசகம்


2️⃣ ஜீவ காருண்யா ஒழுக்கம்


❇️ வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்:


♻️ சிறந்த சொற்பொழிவாளர், போதகாசிரியர், உரையாசிரியர், சித்த மருத்துவர், பசிப்பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, மொழி ஆய்வாளர் (தமிழ்). 



❇️ சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:


♻️ இவர் “சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.


♻️ பிற்காலத்தில் அந்த பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.


❇️ இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ள யாப்பு வடிவங்கள்: 

கண்ணி, கும்மி, கீர்த்தனை.


❇️ நிறுவிய நிறுவனங்கள்: சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்தி வளாகம்.


♻️ இவர் தமது கொள்கைக்கெனத் தனிக்கொடி கொண்டவர். 


♻️ அது மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது.


♻️ இராமலிங்கம் “வடிவுடை மாணிக்க மாலை” என்னும் நூலையும் திருவொற்றியூர் சிவபெருமான் மீது “எழுத்தறியும் பொரும் மாலை” என்னும் நூலையும் பாடியுள்ளார்.


♻️ “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல்” என்றார் வள்ளலார்.


♻️ பாரதியார் வள்ளலாரைப் “புது நெறி கண்ட புலவர்” என்று போற்றினார்.


♻️ வள்ளலாரின் ஞானகுரு சம்பந்தர் ஆவார்.


♻️ வள்ளலார் இளமையில் வழிபட்ட கடவுள் முருகன்.


♻️ வள்ளலார் முதலில் முருக பக்தர், இடையில் சிவ பக்தர், முடிவில் அருட்பெருஞ்சோதி அடியார்.


✍️ “அருட்பெருஞ்சோதி”, “தனிப்பெருங்கருணை” வள்ளலாரின் தாரக மந்திரம் ஆகும்.


❇️ வள்ளலாரின் கோட்பாடு: 

ஆன்ம நேய ஓருமைப்பாடு.


❇️ வள்ளலாரின் கொள்கை: 

ஜீவ காருண்யம்


 ♻️ வள்ளலாரின் பாடல்களைத் திருமுறைகள் என்றழைக்கக்கூடாது.

அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்று இலங்கை ஆறுமுக நாவலர் கூறினார்.


♻️ மருட்பா பொருள் மயக்கத்தை தரும் பாடல். 


♻️ இராமலிங்க அடிகள் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரியர் விருத்தம் பாடினார். 192 சீர் ஆசிரிய விருத்தம்.


♻️ தமிழ் இலக்கியத்துள்ளே அடி எண்ணிக்கையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர் (1596 அடிகள் கொண்ட ஆசிரியம்).


♻️ தொல்காப்பியர் ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.


❇️ மேற்கோள்கள்:


1️⃣ “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை”


2️⃣ “மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே”


3️⃣ “ஒத்தாரும் தாழ்ந்தாரும் உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”


4️⃣ “அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாதார்

பாட்டெல்லாம் மருட்பாட்டு”


5️⃣ “உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”


6️⃣ “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். 


7️⃣ “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”


8️⃣ “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை”


9️⃣ “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்”


🔟 “கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக”

No comments:

Post a Comment