BIOGRAPHY OF V. N. RAVI

தமிழக ஆளுநராக வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராக இருந்த ரவியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

 யார் இந்த வி.என்.ரவி?

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாகக் கொண்டவர் ஆர்.என். ரவி. இவரின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி என்பதாகும். இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. பீகாரை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

கேரளாவிலும் மற்ற பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்.என். ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் திறம்பட பணி செய்தவர். மத்திய உளவு பிரிவான ஐபி-யில் பணியாற்றியிருக்கும் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு கொண்டுள்ளார்.

வரலாற்றில் இரண்டாம் முறை: தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி யார்?

தமிழக ஆளுநராக வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராக இருந்த ரவியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

 யார் இந்த வி.என்.ரவி?

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாகக் கொண்டவர் ஆர்.என். ரவி. இவரின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி என்பதாகும். இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. பீகாரை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

கேரளாவிலும் மற்ற பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்.என். ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் திறம்பட பணி செய்தவர். மத்திய உளவு பிரிவான ஐபி-யில் பணியாற்றியிருக்கும் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு கொண்டுள்ளார்.

ravi

2012ல் தனது காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரவி பிரதமர் அலுவலகத்தில் இணை உளவு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியை மேற்கொண்டுவந்தார். இதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் அதற்கடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் ரவி.

நாகாலாந்தில் 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த நிலையில் தான் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஆர்.என். ரவி. அவரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

திரும்பும் வரலாறு!

தமிழக ஆளுநர் வரலாற்றில் காவல் பணியில் இருந்து ஆளுநர்கள் ஆகியிருப்பது இருவர் மட்டுமே. முதலமானவர், கடந்த 2002ஆம் ஆண்டில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் டிஜிபி ராமமோகன் ராவ். இவர் முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்த நிலையில், 2 ஆண்டுகளிலேயே வட கிழக்கு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதன்பின் ராஜினாமா செய்தார் ராமமோகன் ராவ். அவருக்கு அடுத்து இப்போது ஆர்.என்.ரவி காவல் பணியில் இருந்த இரண்டாவது நபராக ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்

No comments:

Post a Comment