DAILY CURRENT AFFAIRS 31 JULY 2021


தினசரி நடப்பு நிகழ்வுகள் :




01.சிபிஎஸ்இ  +2 மதிப்பெண் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. சிபிஎஸ்இ பிளஸ் டூ மதிப்பெண் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில்  அல்லது அந்தந்த பள்ளிகளிலேயே தெரிந்து கொள்ளலாம்: மத்திய கல்வித்துறை செயலாளர்

02.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி  இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்க பதக்கத்தை உறுதி செய்தார்

03.ஒருவருக்கு இருவேறு கொரானா தடுப்பூசி கோவேக்சின் , கோவிஷீல்டு மாற்றி செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக நிபுணர்குழு தகவல்

04.ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவது ஒட்டி ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

05.டோகியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நான்காவது லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 1-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது

06.இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்த உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்

07.பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

08. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி- தொல் திருமாவளவன்

09. பிரதமர் மோடியே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்திக்கிறார் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சரையும் சந்திக்கிறார்

10. மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பை தொடர தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

11.தேவையான மருத்துவ ஆக்சிசன் கையிருப்பில் உள்ளதால் அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் - தமிழக அரசு தகவல்

12.பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் வழக்கை அவசர வழக்காக ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

13.தமிழ்நாட்டிற்கு மேலும் 27035 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை வருகின்றன

14.தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொம்புத்துறை என்ற ஊர் பெயரை கடையக்குடி என்று மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது

15.அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் அடுத்தடுத்து சூறாவளியால் வீடுகள், அலுவலகங்கள் முற்றிலுமாக உருக்குலைந்தன. மேலும் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது


No comments:

Post a Comment