TN- Large boundary area Districts

 அறிந்துகொள்வோம் : தமிழ்நாட்டில் பரப்பளவில் மிக பெரிய மாவட்டம் 


தமிழகத்தில் உள்ள முப்பத்தி எட்டு மாவட்டங்களில் எந்த மாவட்டம் பெரியது தெரியுமா?


தமிழகத்தில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில் மிகப் பெரிய 10 மாவட்டங்கள் எது..? அது யாருடைய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது..?


மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு..? நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். அரசு தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இதனை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கேள்விகள் அடிக்கடி டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வியாகவும் இருக்கிறது.


திண்டுக்கல் மாவட்டம் 

1985ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டத்தில் முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டம் மொத்தம் 6,266.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 21,59,775 ஆகும். இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம்


தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 6,188 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதே போல இந்த மாவட்டம் 1989ஆம் ஆண்டு ஆற்காட்டிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் மக்கள் தொகை 24,64,875 ஆகும். இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம்


கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாவட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 5,522 சதுர கிலோமீட்டர் ஆகும். 1979-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த மக்கள் தொகை 22,51,744 ஆகும்.


சேலம் மாவட்டம்


அடுத்ததாகச் சேலம் மாவட்டம் நான்காவது இடத்தை பிடிக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5,245 சதுர கிலோமீட்டராக உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 34,82,056 ஆகும்.


கிருஷ்ணகிரி மாவட்டம்


5,143 சதுர கிலோமீட்டர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது.. இந்த மாவட்டம் பிப்ரவரி 9 2004-ஆம் ஆண்டு தருமபுரியிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது. மாவட்டத்தின் மக்கள் தொகை 18,79,809 ஆகும். இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிக்கிறது.. இதன் சதுர அளவு மொத்தம் 5,186.34 சதுர கிலோ மீட்டார்களாகும். 2009 பிப்ரவரி 22ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியால் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 24,79,052 ஆகும்.


கோயம்புத்தூர் மாவட்டம்


தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்கள் பட்டியலில் கோவை மாவட்டம் ஏழாம் இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த சதுர அளவு 4,723 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மாவட்டத்தின் மக்கள் தொகையானது 34,58,045 ஆகும்.


தூத்துக்குடி மாவட்டம்


தமிழகத்தின் எட்டாவது மிகப்பெரிய மாவட்டங்களின் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் சதுர அளவு 4,707 சதுர கிலோமீட்டர்களாகும். அக்டோபர் 20, 1986 ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. மாவட்டத்தின் மக்கள் தொகையானது 17,50,176 ஆகும். இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம்


ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை. இதன் மொத்த சதுர அளவு 4,663 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்த மாவட்டமானது 1974 ஜனவரி 14ஆம் தேதி தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,18,345 ஆகும்.


தருமபுரி மாவட்டம்


இந்த பட்டியலில் 10வது இடத்தை பெற்றுள்ள மாவட்டம் தருமபுரி. இதன் சதுர அளவு 4,497.77 சதுர கிலோமீட்டர்களாகும். இந்த மாவட்டமானது 1965 அக்டோபர் 2ம் தேதி சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் மக்கள் தொகையானது 15,06,843 ஆகும். இந்த தருமபுரி மாவட்டத்தை மறைந்த முதல்வர் பக்தவத்சலம் உருவாக்கினார்.


*********----*******************----*****----*****

No comments:

Post a Comment